Friday, September 12, 2008

என்ன சொல்வது?


தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தினமும் வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


இதில் முக்கிய ஆவணங்கள், விண்ணப்பங்கள், கட்டுக் கட்டாக, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றன.
கடந்த ஒரே மாதத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத பணத்தை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர்.


செய்தி: தினமணி.


எனக்கு என்ன சொல்லுறதுன்ன்னே தெரியல...
அப்ப நீங்க?

Monday, September 8, 2008

உண்மைதானே


"தந்தை போயின் கல்வி போம்' என்பது அந்தக் கால மொழி. ஆனால் இப்போது குழந்தைகளின் கல்வியில் தந்தையின் பங்களிப்பை விட தாயின் பங்களிப்புதான் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.


வேலைக்குச் செல்லும் பெற்றோர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த உண்மை புலனாகியுள்ளது. "அசோசேமின்' சமூக மேம்பாட்டு அறக்கட்டளை பிரிவு லக்னெü, சண்டீகர், புணே, பெங்களூர், ஆமதாபாத், உதய்பூர், சிம்லா, டேராடூன், இந்தூர், பாட்னா, கொச்சி, சென்னை ஆகிய நகரங்களில் 4,700 பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தியது.


இதில் குழந்தைகளின் கல்வியில் தந்தையைவிட தாயே அதிக அக்கறை செலுத்துவது தெரிய வந்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் 4 சதவீத தந்தைகள்தான் தங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடத்தைக் கவனிக்க சிறிது நேரம் ஒதுக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எஞ்சிய 96 சதவீத தந்தையர்கள், தங்களது அலுவலக வேலையைக் குறை கூறியதோடு, இதனால் குழந்தையைக் கவனிக்க முடியவில்லை என்று நொண்டிச் சமாதானம் கூறியுள்ளனர்.