Thursday, October 30, 2008

கும்மியடிப்போம் வாரியளா?



கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்துஅல்லது நடனம்.
இது தொன்று தொட்டு வரும் ஒரு கிராமியக்கலை.
'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாகஆடிக்கொண்டோ,
அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ
வரும்போது இசைக்குத் தக்கவாறு தன்
கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும்,
தலையையும் அழகுற அசைத்து,
குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.

நம் பதிவர்கள் மத்தியில் உள்ள கும்மிக்கு இது போல சரியான
அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்!

Wednesday, October 29, 2008

விட்டுப்போனவளின் விடாத நினைவு!




சாலையோர மரத்தின்
உதிர்ந்திருக்கும் மலர்களில்
உனக்கான ஒன்றும் இருக்கலாம்.



ஓரம் தைத்த கைகுட்டையின்
ஒற்றை இன்சியலாய் இருக்கிறது
என் பெயர் மட்டும்.



உன்னையும் என்னையும்
நனைத்த மழைத்துளிகளை
எங்கு சென்று தேடுவது?



நீ மிதித்து போன சருகுகள்
பத்திரமாய் இருக்கின்றன
அலமாரி புத்தகங்களில்.



விட்டுப்போன உன்னை நினைத்து
புலம்புகின்றன என் கவிதைகள்.



உனக்கான கடிதங்களில்
கேள்விக்குறிகளால் நிரப்பி
எனக்கே அஞ்சல்
செய்து கொள்கிறேன்.



இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது !