Wednesday, November 12, 2008

சும்மா தமாசு....

கொஞ்சம் சிரிக்கலாமா?


















எப்படி இருக்கு?!
.

Saturday, November 8, 2008

நினைவிருக்கிறதா உனக்கு?



ஓ! என் நண்பனே....
முகவரி மாறி
மறந்து போன உனக்கு
இக்கடிதமெழுதி
காற்றலையில் விடுகிறேன்!

நினைவிருக்கிறதா உனக்கு?


வாடகை சைக்கிள் வாங்கி
குரங்கு பெடல் போட்டது,



தாமரைக்குளத்தில்
மூங்கு நீச்சல் போட்டது,



தென்னைமரமேறி
நெஞ்சு சிராய்ப்போடு
இள நீர் குடித்தது,



பம்பர விளையாட்டில்
அடித்துக்கொண்டது,



உப்புத்தொட்டு
மாங்காய் கடித்தது,



புது பேண்ட் போட்டு
ஊரைச்சுற்றியது,



கோவில் கட்டி
சாமி தூக்கியது,



ஆம் நண்பா உறங்கா
இந்த நினைவுகள்
உயிர்ப்போடு
வைத்திருக்கின்றன
நம் நட்பை.



நானும் நம் கிராமமும்
உன்னைப்போல் மாறிவிடாமல்
காத்திருக்கிறோம்.....



என்றேனும் ஒரு நாள்
உன் நினைவலைகளில்
என் ஞாபகம் வந்தால்
ஒரு முறை வந்து போ


வாழ்க்கையையும்
நட்பையும் புதுப்பிக்கலாம்!!!


.

Friday, November 7, 2008

கடற்கரை காலடிச்சுவடுகள்....




நீயும் நானும் நடந்த
புல் வெளி செடிகள்
பூ பூத்து உதிர்கின்றன!



உன்னோடு உலவிய
கடற்கரை காலடிச்சுவடுகள்
காற்றடித்து கலைகின்றன!



உனக்காக எழுதிய கடிதங்கள்
சிரிக்கின்றன என்னைப் பார்த்து!



எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!



ரோஜாவை பார்க்கும் போது
முட்கள் தெரிவதில்லை;
உன் புன்னகை பின்னிருந்த
கண்ணீர் தெரியவில்லை எனக்கு!



நீ கண்கள் மூடி
காதல் முறித்து செல்கிறாய்!



நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!



.

Thursday, November 6, 2008

அப்பாவும் மகனும்....



ஒரு ஊர்ல ஒரு பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருடைய
திறமையான , பக்குவமான நடைவடிக்கைகளால் தன்
தொழிலில் மென்மேலும் இலாபங்களை ஈட்டினார்.
அவர் தன் மகனிடம் எல்லா வியபாரங்களையும் ஒப்படைத்துவிட்டு
ஓய்வெடுக்க விரும்மினார்.

தன் மகனை அழைத்து மகனே, இத்தனை வருடம் நம்
வியபாரத்தை நல்ல படியா நடத்தி வந்தேன், இனி வயதாகி
விட்டதால் எல்லா பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்க
விரும்புகிறேன், உனக்கு இஷ்ட்டம் என்றால் எனக்கு தெரிந்த
எல்லா நுனுக்கங்களையும் உனக்கு சொல்லித்தருகிறேன், என்ன
சொல்கிறாய்? என்று கேட்டார். மகனும் சம்மதிக்க, சரி உனக்கான
முதல் பாடம் நாளை காலை ஆரம்பிக்கலாம் என்று கூறி சென்று விட்டார்.

மறு நாள் காலை, மகனை அழைத்து மாடிக்கு செல்லுமாறு
கூறினார். மகனும் மாடிக்கு சென்றான். இவர் கீழே நின்று
கொண்டு மகனை மாடியிலிருந்து கீழே குதிக்க சொன்னார்.
மகனோ திக்கித்து அப்பா கீழே குதித்தால் கால் உடந்துவிடும்
எப்படி குதிப்பது என்றான். அப்பாவோ அட சும்மா குதி,
நாந்தான் கீழ இருக்கேன்ல்ல குதி, என்றார். மகனும் அப்பாவை நம்பி
குதித்துவிட்டான். ஆனால் அப்பா ஒன்னும் செய்யவேயில்லை. அவனுக்கு
காலில் பலத்த அடி. என்ன அப்பா இப்படி செய்து விட்டீர்கள், உங்களை
நம்பிதானே குதித்தேன் என்றான்.

அப்பா கூறினார்

மகனே இதுதான் உனக்கான முதல் பாடம். தொழில் என்று
வந்துவிட்டால் யார் என்ன கூறினாலும் நம்பக்கூடாது.
தனக்குத்தானே சிந்தித்துப்பார்த்து இதை செய்தால் என்ன
பலன் ஏற்படும் என்று யோசித்து செயல் பட வேண்டும்.
இது உன் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான் இப்படி செய்தேன் என்று கூறினார்.

ஹி ஹி 1 : மகன் பின்னாளில் எப்படி வியபாரம் செய்தான் என்பது
படிப்பவரின் கற்பனைக்கு.

ஹி ஹி 2 : எல்லாரும் மொக்கை போடும் போது
நம்ம ஏதாவது நல்ல பதிவு போடனும்ன்னு
இந்த கதை.

ஹி ஹி 3 : இது நல்ல கதையான்னு கேட்ட்கக்கூடாது
.

ச்சும்மா தாமாசு....

ஓரு கணிப்பொறித்துறை சார்ந்த கணவன்
மனைவிக்கிடையே நடந்த உரையாடல்.
நல்ல கற்பனை. வலையுலகில் மேய்ந்த போது
பொறுக்கியது, நீங்களும் பாருங்க...

Husband - hey dear, I am logged in.
Wife - would you like to have some snacks?
Husband - hard disk full.
Wife - have you brought the saree.
Husband - Bad command or file name.
Wife - but I told you about it in morning
Husband - erroneous syntax, abort, retry, cancel.
Wife - hae bhagwan !forget it where’s your salary.
Husband - file in use, read only, try after some time.
Wife - at least give me your credit card,i can do some shopping.
Husband - sharing violation, access denied.
Wife - i made a mistake in marrying you.
Husband - data type mismatch.
Wife - you are useless.
Husband - by default.
Wife - who was there with you in the car this morning?
Husband - system unstable press ctrl, alt, del toReboot.
Wife - what is the relation between you & yourReceptionist?
Husband - the only user with write permission.
Wife - what is my value in your life?
Husband - unknown virus detected.
Wife - do you love me or your computer?
Husband - Too many parameters.
Wife - i will go to my dad’s house.
Husband - program performed illegal operation, it willClose.
Wife - I will leave you forever.
Husband - close all programs and log out for another User.
Wife - it is worthless talking to you.
Husband - shut down the computer.
Wife - I am goingHusband - Its now safe to turn off your computer.



எப்படி இருக்கு? பின்னூட்டத்துல சொல்லுங்க..


.

Wednesday, November 5, 2008

காத்திருக்கும் காதல்




உனக்கான நினைவுகளில்
வாடவிட்டு எனக்கான
பொழுதுகளை எடுத்துச்
சென்றவனே!



பழகிப்பழகி புளித்துப்
போய் விட்டது
இந்த தனிமை!



கனவுக்காடுகளில்
சுற்றியலைவதால்
என் நினைவு வயல்கள்
வறண்டு விட்டனடா!



தலையனையோடு
பகிர்ந்துகொள்கிறேன்
கண்ணிரோடு
நம் நேசத்தையும்!



உன் வரவை
எதிர்னோக்கி
சுற்றிக்கொண்டிருக்கிறது
என் கடிகாரம்!



அதிகாலை இரயில்
ஓசையில் கலைகின்றன
என் கனவுகள்!


.

Saturday, November 1, 2008

விட்டுப்போனவளின் விடாத நினைவுகள் - 2.



கசக்கியெறிந்த காகித குவியல்
பூனையின் நடையால்
சலசலக்கிறது;



உன் கவிதைக்கான வார்த்தைகளை
இருட்டின் அடர்த்தியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.



எடுத்து வைத்த உணவின் மீது
எறும்புகளின் ஊர்வலத்தொடக்கம்.



இந்த இரவிலும் எங்கோயோ கரையும்
ஒற்றைக்காகம் எனக்குத்துனையாய்.



உன் இனிய உறக்கம் கலைக்குமா
என் கொடிய நினைவுகள்?



நாவறண்ட பேனா
எழுத மறுக்கிறது!



எப்போதும் போல்
எல்லோருக்கும்
விடிகிறது பொழுது!!!


-------------------------------