Sunday, September 28, 2008

தீபாவளி ஜாக்கிரதை

எல்லாரும் தீபாவளி கொண்டாடத்துக்கு
ரெடியாகிகிட்டு இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.
ரொம்ப ஜாக்கிரதையா கொண்டடனும் ஆமா.வெடி வெடிக்கும் போது பார்த்து வெடிக்கனும்



அப்புறம் ரொம்ப முக்கியம் விஜயோட வில்லு தீபாவளிக்கு ரிலீசு
இல்லன்னு நினைக்கிறேன்.
அதனால ஒன்னும் பயப்படாம தீபாவளிய கொண்டாடலாம்.
அதையும் மீறி ஒரு வேளை ரிலீசாயிட்டா ...
ஜாக்கிரதை சாமியோவ்.....

Friday, September 26, 2008

காதல் கிறுக்கல்கள்

1. நான் என்ன கிறுக்கினாலும்
கவிதையாகி விடுகிறது,
கிறுக்கியது உன்னைப்ப்ற்றி
என்பதாலோ!

2. எந்த வாள்வீச்சும்
தோற்றுப்போகும்
உந்தன் விழிவீச்சின் முன்.

3. எந்தன் இதய கூட்டில்
கண்னெறிந்து போகிறாய்
கண்ணாடி வீட்டில்
கல்லெறிவதைப்போல...

4. நீ சிரித்துக்கொண்டிருக்கிறாய்
நான்
முத்துக்குளிக்கிறேன்..

5. எப்போதும் வாடாத
பூக்கள்
உந்தன்
சுடிதார் சோலையில்...

6. உன் வீடு கடக்கும் போதெல்லாம்
தலை திரும்புவது
அனிச்சை செயலாகி விட்டதெனக்கு...

7. நான் உன்னை கேலி
செய்யும் போதெல்லாம்
சிரித்துக்கொண்டெ ஓடுகிறாய்,
உன்னை என்னிடம்
விட்டுவிட்டு...


பிடிச்சிருந்தா ஒரு பின்னூட்டம் தட்டுங்க..

Tuesday, September 23, 2008

விவசாயி என்றொரு தெய்வம்



இவர்கள் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும் என்றோரு பொன்வாக்கு உண்டு. அந்த காலத்தில் எல்லாம் பருவ மழை பொய்க்காமல் பெய்தது. ஆறுகளும் ஏரிகளும் நீர் நிரம்பியிருந்தன. இயற்கை உரமிடப்பட்ட நிலங்கள், விவசாயிகளின் உழைப்பு இரண்டும் சேர்ந்து மண்ணிலிருந்து பொன்னெடுத்தனர் நம் ஆட்கள்.


மெல்ல மெல்ல இயற்கையிலிருந்து செயற்கைக்கு மாறினோம். காடு வெளைந்தென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற நிலை வந்தது. மரங்களை அழித்து மனித மரங்களானோம். தற்போதய நிலை கிராமங்களை விட்டு, விவசாயம் மறந்து நகரங்களில் குடியேறி பசுமையான இடங்கள் எல்லாம் கட்டிடங்களாகிவிட்டன.... இந்த நிலை தொடர்ந்தால்?




அப்பா நெல்லு வித்து வேட்டியில முடிந்த காசு
எம்சிஏ வா மாறிப்போச்சி,
அம்மா பொங்கி போட்ட பொன்னி அரிசி சோறு
பீசாவா மாறிப்போச்சி,
நடக்க கத்துக்கிட்ட கிராமத்த மறந்துட்டோமே;
பணத்த உண்டாக்க பட்டணம் வந்தோம்
பசுமைய உண்டாக்க எங்க போவோம்?
காத்தோட மாசு நீக்க மரம் இருக்கய்யா;
நம் மனசோட மாசு நீக்க என்ன செய்யய்யா?
















Thursday, September 18, 2008

மனிதம் - அப்படீன்னா?






விலங்கிலிருந்து பிறந்தோமா?
விலங்காய் மாறிப்போனோமா?

“இந்த நிலையும் மாறி விடும்”

ஒரு ஊர்ல ஒரு பெரிய ராஜா இருந்தாரு. அவரு நல்ல படியா ஆட்சி செய்ததால நாடு செழிப்பா இருந்த்துச்சு.மாசம் மும்மாரி மழை பெய்தது. எல்லாரும் சந்தோசமா வாழ்ந்தாங்க. அதனால ராஜாவுக்கு எந்த கவலையும் இல்ல.அவருக்கு இந்த உலகத்திலேயே தாந்தான் பெரிய ஆளுன்னு ஒரு நெனைப்பு வந்திடுச்சி.

இப்படி அவரோட ஆட்சி போயிக்ட்டு இருக்கும் போது பக்கத்து நாட்டு மன்னன் இவரு மேல போர் தொடுத்தான்.இவரு தாந்தான் பெரிய ஆளு சுலபமா ஜெயிச்சிடலாம்னு நினைச்சாரு. ஆனா எதிரி மன்னன் கடுமையாபோரடி இவர தோற்கடிச்சி நாட்டை கைபற்றிட்டான். இவரு தப்பிச்சி காட்டுக்குள்ள ஓடிட்டாரு.

காட்டுக்குள்ள கல்லுலயும் முள்ளுலயும் ரொம்ப கஷ்ட்டப்பட்டாரு. பழங்களையும் கிழங்கையும் எடுத்து சாப்பிட்டாரு.விலங்குகளுக்கு பயந்து தூங்காம தவிச்சாரு. ஓவ்வொரு நாளும் போறது ரொம்ப திண்டாட்டமா இருந்த்துச்சி.இப்படி வாழுறதுக்கு செத்தெ போயிடலாம்ன்னு நினைச்சிகிட்டு தூக்கு மாட்டிக்க ஒரு நல்ல மரத்த தேடி போனாரு.

ஒரு பெரிய மரத்த பார்த்துட்டு அங்க போனா, அங்க ஒரு முனிவரு தவம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவரு கண்ண திறந்து ராஜவ பார்த்து நீ ஏன் சாகப்போறன்னு கேட்டாரு. ராஜா அழுதுகிட்டே தன்னோட நிலைமையை சொன்னாரு. முனிவர் சிரிச்சிகிட்டே ஒன்னும் கவலைபட வேண்டாம், நான் உனக்கு ஒரு மோதிரம்தருகிறேன். அதுல ஒரு மந்திரம் இருக்கு.அப்புறமா அத பாரு, எல்லாம் சரியாயிடும்ன்னு ஆசிர்வாதம் பண்ணிஅனுப்புனாரு. அந்த மன்னன் அந்த மோதிரத்த திறந்து பார்த்தான், அதுல
“இந்த நிலையும் மாறி விடும்”
அப்படின்னு எழுதி இருந்துச்சு. அத பார்த்தவுடனே ராஜாவுக்கு புது தெம்பு வந்துச்சு. மாறுவேசம் போட்டு நாட்டுக்குள்ளபோயி வாலிபர்கள ஒன்று திரட்டி போர் பயிற்சி கொடுத்தாரு. எல்லாரும் நல்லா பயிற்சியான பின்ன அதே மன்னனனைபோர் தொடுத்து வெற்றி பெற்று தன்னோட கோட்டையை மீண்டும் பிடிச்சாரு.
இந்த வெற்றிய கொண்டாட பெரிய ஊர்வலம் ஏற்பாடு பண்ணி யானை மேல ஊர்வலமா ஊர சுத்தி வந்தாரு.மக்கள் பூவ வாரி இரைத்து வாழ்த்துனாங்க. ராஜா சிரிச்சிகிட்டே ஊர்வலம் வந்தாரு. அப்ப கூட்டத்துல அந்த முனிவரும் இருந்தாரு. ராஜா அவர பார்த்து கையசைத்தாரு. அப்ப அந்த முனிவர் சிரிச்சிகிட்டே மோதிரத்தகாண்பிச்சாரு. அப்பதான் ராஜாவுக்கு நினைவு வந்தது அந்த மந்திரம், “இந்த நிலையும் மாறி விடும்”. இப்ப ராஜா தெளிவாயிட்டாரு. வாழ்க்கை என்பது அத்தனை சுலபமில்லன்னு......

குறிப்பு 1: வாழ்க்கையில கஷ்ட்டம் வரும்போது இந்த நிலையும் மாறிவிடும்ன்னு மனச தைரியமாக்கி ஜெயிக்கனும், எல்லாமே சரியா அமைந்தா ஆணவப்படாம இருக்கனும்.

குறிப்பு 2: இந்த கதை பிடிச்சா பின்னுட்டம் போடுங்க; பிடிக்கலன்னா கண்டுகாம விட்டுடுங்க,

Friday, September 12, 2008

ரெடியா இருங்க...


நாயகன் படத்தின் ரிசல்ட்

அதன் நாயகர்கள் ரமணா மற்றும்

ரித்தீசுக்குபுதிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.
ஆகவே நண்பர்களே ரெடியா இருங்க;
புரட்சி நாயகன்
கொடை வள்ளள்
தமிழகத்தின் சிங்கம்
வெற்றி தளபதிஜே.கே.ஆரின் காவிய அடுத்த படைப்புக்கு...

என்ன சொல்வது?


தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தினமும் வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


இதில் முக்கிய ஆவணங்கள், விண்ணப்பங்கள், கட்டுக் கட்டாக, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றன.
கடந்த ஒரே மாதத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத பணத்தை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர்.


செய்தி: தினமணி.


எனக்கு என்ன சொல்லுறதுன்ன்னே தெரியல...
அப்ப நீங்க?

Monday, September 8, 2008

உண்மைதானே


"தந்தை போயின் கல்வி போம்' என்பது அந்தக் கால மொழி. ஆனால் இப்போது குழந்தைகளின் கல்வியில் தந்தையின் பங்களிப்பை விட தாயின் பங்களிப்புதான் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.


வேலைக்குச் செல்லும் பெற்றோர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த உண்மை புலனாகியுள்ளது. "அசோசேமின்' சமூக மேம்பாட்டு அறக்கட்டளை பிரிவு லக்னெü, சண்டீகர், புணே, பெங்களூர், ஆமதாபாத், உதய்பூர், சிம்லா, டேராடூன், இந்தூர், பாட்னா, கொச்சி, சென்னை ஆகிய நகரங்களில் 4,700 பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தியது.


இதில் குழந்தைகளின் கல்வியில் தந்தையைவிட தாயே அதிக அக்கறை செலுத்துவது தெரிய வந்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் 4 சதவீத தந்தைகள்தான் தங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடத்தைக் கவனிக்க சிறிது நேரம் ஒதுக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எஞ்சிய 96 சதவீத தந்தையர்கள், தங்களது அலுவலக வேலையைக் குறை கூறியதோடு, இதனால் குழந்தையைக் கவனிக்க முடியவில்லை என்று நொண்டிச் சமாதானம் கூறியுள்ளனர்.