Tuesday, September 23, 2008

விவசாயி என்றொரு தெய்வம்



இவர்கள் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும் என்றோரு பொன்வாக்கு உண்டு. அந்த காலத்தில் எல்லாம் பருவ மழை பொய்க்காமல் பெய்தது. ஆறுகளும் ஏரிகளும் நீர் நிரம்பியிருந்தன. இயற்கை உரமிடப்பட்ட நிலங்கள், விவசாயிகளின் உழைப்பு இரண்டும் சேர்ந்து மண்ணிலிருந்து பொன்னெடுத்தனர் நம் ஆட்கள்.


மெல்ல மெல்ல இயற்கையிலிருந்து செயற்கைக்கு மாறினோம். காடு வெளைந்தென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற நிலை வந்தது. மரங்களை அழித்து மனித மரங்களானோம். தற்போதய நிலை கிராமங்களை விட்டு, விவசாயம் மறந்து நகரங்களில் குடியேறி பசுமையான இடங்கள் எல்லாம் கட்டிடங்களாகிவிட்டன.... இந்த நிலை தொடர்ந்தால்?




அப்பா நெல்லு வித்து வேட்டியில முடிந்த காசு
எம்சிஏ வா மாறிப்போச்சி,
அம்மா பொங்கி போட்ட பொன்னி அரிசி சோறு
பீசாவா மாறிப்போச்சி,
நடக்க கத்துக்கிட்ட கிராமத்த மறந்துட்டோமே;
பணத்த உண்டாக்க பட்டணம் வந்தோம்
பசுமைய உண்டாக்க எங்க போவோம்?
காத்தோட மாசு நீக்க மரம் இருக்கய்யா;
நம் மனசோட மாசு நீக்க என்ன செய்யய்யா?
















4 comments:

குடுகுடுப்பை said...

வெவசாயி பத்தி எழுதினா வெல போவதுன்னு தெரிஞ்சும் எழுதின நீங்க ரொம்பவே நல்லவருங்க

Thamiz Priyan said...

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயியின் நிலை... :(

ஆயில்யன் said...

//பசுமைய உண்டாக்க எங்க போவோம்?
காத்தோட மாசு நீக்க மரம் இருக்கய்யா;//

மரம் ஒரு காலத்தில் இருந்துச்சு :(

Unknown said...

பச்சைப் பசேல்னு படம் அழகாக இருக்கிறதே.
ரொம்ப பழைய காலத்து படமோ.