Thursday, September 18, 2008

“இந்த நிலையும் மாறி விடும்”

ஒரு ஊர்ல ஒரு பெரிய ராஜா இருந்தாரு. அவரு நல்ல படியா ஆட்சி செய்ததால நாடு செழிப்பா இருந்த்துச்சு.மாசம் மும்மாரி மழை பெய்தது. எல்லாரும் சந்தோசமா வாழ்ந்தாங்க. அதனால ராஜாவுக்கு எந்த கவலையும் இல்ல.அவருக்கு இந்த உலகத்திலேயே தாந்தான் பெரிய ஆளுன்னு ஒரு நெனைப்பு வந்திடுச்சி.

இப்படி அவரோட ஆட்சி போயிக்ட்டு இருக்கும் போது பக்கத்து நாட்டு மன்னன் இவரு மேல போர் தொடுத்தான்.இவரு தாந்தான் பெரிய ஆளு சுலபமா ஜெயிச்சிடலாம்னு நினைச்சாரு. ஆனா எதிரி மன்னன் கடுமையாபோரடி இவர தோற்கடிச்சி நாட்டை கைபற்றிட்டான். இவரு தப்பிச்சி காட்டுக்குள்ள ஓடிட்டாரு.

காட்டுக்குள்ள கல்லுலயும் முள்ளுலயும் ரொம்ப கஷ்ட்டப்பட்டாரு. பழங்களையும் கிழங்கையும் எடுத்து சாப்பிட்டாரு.விலங்குகளுக்கு பயந்து தூங்காம தவிச்சாரு. ஓவ்வொரு நாளும் போறது ரொம்ப திண்டாட்டமா இருந்த்துச்சி.இப்படி வாழுறதுக்கு செத்தெ போயிடலாம்ன்னு நினைச்சிகிட்டு தூக்கு மாட்டிக்க ஒரு நல்ல மரத்த தேடி போனாரு.

ஒரு பெரிய மரத்த பார்த்துட்டு அங்க போனா, அங்க ஒரு முனிவரு தவம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவரு கண்ண திறந்து ராஜவ பார்த்து நீ ஏன் சாகப்போறன்னு கேட்டாரு. ராஜா அழுதுகிட்டே தன்னோட நிலைமையை சொன்னாரு. முனிவர் சிரிச்சிகிட்டே ஒன்னும் கவலைபட வேண்டாம், நான் உனக்கு ஒரு மோதிரம்தருகிறேன். அதுல ஒரு மந்திரம் இருக்கு.அப்புறமா அத பாரு, எல்லாம் சரியாயிடும்ன்னு ஆசிர்வாதம் பண்ணிஅனுப்புனாரு. அந்த மன்னன் அந்த மோதிரத்த திறந்து பார்த்தான், அதுல
“இந்த நிலையும் மாறி விடும்”
அப்படின்னு எழுதி இருந்துச்சு. அத பார்த்தவுடனே ராஜாவுக்கு புது தெம்பு வந்துச்சு. மாறுவேசம் போட்டு நாட்டுக்குள்ளபோயி வாலிபர்கள ஒன்று திரட்டி போர் பயிற்சி கொடுத்தாரு. எல்லாரும் நல்லா பயிற்சியான பின்ன அதே மன்னனனைபோர் தொடுத்து வெற்றி பெற்று தன்னோட கோட்டையை மீண்டும் பிடிச்சாரு.
இந்த வெற்றிய கொண்டாட பெரிய ஊர்வலம் ஏற்பாடு பண்ணி யானை மேல ஊர்வலமா ஊர சுத்தி வந்தாரு.மக்கள் பூவ வாரி இரைத்து வாழ்த்துனாங்க. ராஜா சிரிச்சிகிட்டே ஊர்வலம் வந்தாரு. அப்ப கூட்டத்துல அந்த முனிவரும் இருந்தாரு. ராஜா அவர பார்த்து கையசைத்தாரு. அப்ப அந்த முனிவர் சிரிச்சிகிட்டே மோதிரத்தகாண்பிச்சாரு. அப்பதான் ராஜாவுக்கு நினைவு வந்தது அந்த மந்திரம், “இந்த நிலையும் மாறி விடும்”. இப்ப ராஜா தெளிவாயிட்டாரு. வாழ்க்கை என்பது அத்தனை சுலபமில்லன்னு......

குறிப்பு 1: வாழ்க்கையில கஷ்ட்டம் வரும்போது இந்த நிலையும் மாறிவிடும்ன்னு மனச தைரியமாக்கி ஜெயிக்கனும், எல்லாமே சரியா அமைந்தா ஆணவப்படாம இருக்கனும்.

குறிப்பு 2: இந்த கதை பிடிச்சா பின்னுட்டம் போடுங்க; பிடிக்கலன்னா கண்டுகாம விட்டுடுங்க,

5 comments:

ஆயில்யன் said...

//வாழ்க்கையில கஷ்ட்டம் வரும்போது இந்த நிலையும் மாறிவிடும்ன்னு மனச தைரியமாக்கி ஜெயிக்கனும், எல்லாமே சரியா அமைந்தா ஆணவப்படாம இருக்கனும்.///

நல்ல கருத்து !

:))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வருகைக்கு நன்றி அண்ணா...

கானா பிரபா said...

//வாழ்க்கையில கஷ்ட்டம் வரும்போது இந்த நிலையும் மாறிவிடும்ன்னு மனச தைரியமாக்கி ஜெயிக்கனும், எல்லாமே சரியா அமைந்தா ஆணவப்படாம இருக்கனும்.///

ரோபோ பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கு. கலக்கல் சுடர்ஸ்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க கானா அண்ணா, வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி...

செம்பை செவ்வேள் said...

hai,
this is your favourite diaglog
just a sleep not a fall!!!