12ம் வகுப்பு, அ- பிரிவு. காலை நேர முதல் வகுப்பு.
தமிழ் ஐயா உள்ளே நுழைந்ததும் அமைதியாகிறது.
அனைவரும் வணக்கம் சொல்லி அமர்ந்ததும் ஐயா
பேச தொடங்குகிறார்.
கண்னுகளா, இதோ பொது தேர்வு உங்களை நெருங்கி
விட்டது. நீங்கள் எல்லாரும் மிகவும் சிரமப்பட்டு கண்
விழித்து தயார் செய்து கொண்டிருப்பீர்கள். ஆகவே
நான் இந்த வகுப்பில் உங்களுக்கு பாடம் எதுவும்
எடுக்கப்போவதில்லை. நாமனைவரும் ஒரு அரை மணி
நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டிருப்போம். இது உங்களை
சற்றே புத்துணர்ச்சி அடையவைக்கும். நாமனைவரும்
பிரிந்து சென்றாலும் நீங்கள் எல்லாம் ஒரு நல்ல நிலையை
அடைவீர்கள் என்று நம்புகிறேன்.
அப்போது ஒரு பணக்கார மாணவன்,ஐயா, நாமெல்லாம் பிரிந்து செல்ல போகிறாம்,எனது அப்பா
நமக்கெல்லாம் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஒரு சில அரசியல்வாதிகளும், ஊர்தலைவர்களும் நமது
தலைமையாசிரியரும் அவ்விருந்தில் கல்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
இப்பொழுதே 4 ஆடு வாங்கி கட்டி வைத்துவிட்டோம். நீங்களும் வர
வேண்டும் ஐயா.
தமிழ் ஐயா;தம்பி, நான் மாமிசம் சாப்பிடுவதில்லை,
"கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்ற அய்யனின் வாக்கை கடைபிடித்து வருகிறேன். பிற
உயிர்களை கொல்வது பாவமல்லவா? பிற உயிர்களை
கொல்பவன் என்றுமே நிம்மதியாக இருக்க முடியாது.
அந்த மாணவன்;முனுமுனுப்பாக, போடா இவரும் இவரோட வள்ளுவரும்.
வகுப்பு கலைகிறது. ஒரு மாணவனின் கண்ணில் நீருடன்
அமர்ந்திருக்க அதை கண்ட ஐயா பதற்றத்துடன், ஏம்ப்பா,
என்னாச்சு, ஏன் கலக்கத்துடன் இருக்க?
அந்த மாணவன்:ஐயா, பிற உயிர்களை கொல்பவன் நிம்மதியாவே இருக்க
முடியாதுன்னு நீங்க சொன்னிங்க, ஆனா எங்கப்பா ஒரு
கறி கடை வைத்திருக்கார், அவரு தினமும் பல ஆடுகளை
கொன்று விற்று வரும் காசில்தான் எங்க குடும்பமே நடக்குது,
அப்ப நாங்க நிம்மதியா இருக்க முடியாதா?
ஐயா சிரித்து கொண்டே, அட இதுதான் உன் கவலையா?
சரி விடு, நான் உங்க அப்பாவை பார்த்து பேசுகிறேன்.
நீ ஓன்றும் கவலைப்படாதே!
சிறிது நாட்களுக்கு பிறகு....
அந்த கறிக்கடை இடிக்கப்படுகிறது.
அதே இடத்தில் ஒரு பலசரக்கு மளிகை கடை
திறக்கப்படுகிறது. அதோ அந்த மாணவனின்
அப்பா கல்லாவில் அமர்ந்திருக்கிறார். அவர் தலைக்கு
மேலே.,
"கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்ற குறள் எழுதிய பலகை பொருத்தப்பட்டிருக்கிறது.
ஹி ஹி : திருக்குறளை வைத்து கதை எழுத ஆசைப்பட்டாச்சு,
சரியா வரலைன்னாலும் எழுதியாச்சு, எப்படி இருக்கோ?
திட்டாதிங்கோ, அடுத்த முறை இன்னும் நல்லா எழுதலாம்!