தற்போதெல்லாம் ஈசி சேரும் கைத்தடியும் மட்டுமே
துனையாகி போனது எனக்கு.பேத்திக்கு கதை சொல்லி தூங்க செய்வதும், காய்கறி வாங்கி வருவதும் தலையாய பணியாய்தந்திருக்கிறாள் மருமகள். மனைவி சொல்லே சரி என தினசரி கூடஅதிக செலவென்று நிறுத்திய மகன்.காலை காபியும் காய்கறி கடையும், மதிய உணவும் சிறு தூக்கமும் என்று பகல் பொழுது ஓடும்.மாலையை எதிர்பார்த்து காத்திருக்க்கும்எனக்கு அந்த பூங்கா தான் உற்ற துனைவன். என் சோகத்தை, சுகத்தை எல்லாம் இங்கிருக்கும்ஒவ்வொரு மரமும் செடியும் அறியும், அவைகளோடு நான் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.இன்றும் அப்படிதான்,
இதோ அதே பார்க்கில்அதே பென்ச்சில் அமர்ந்திருக்கிறேன்.
வாழ்க்கை எவ்வாறெல்லாம் மாறி விட்டது?.
நினைத்துப்பார்க்கிறேன், என் பழைய நாட்களை..
எத்தனை இனிமையான வாழ்க்கை அது.
சுவையான பள்ளிக்கூட நாட்கள்; ஆற்றில் அடித்துமகிழ்ந்த நீச்சல், இரண்டாமாட்ட சினிமா; அப்பாவின் கண்டிப்பு, அம்மாவின் அன்பு,
அப்புறம்அந்த கல்லூரி நாட்கள், அதில் தோன்றிய முதல் காதல்!!!.
ஆமாம், இந்த காதல்தான் எத்தனை விசித்திரம், எல்லோரையும் போல என்னையும்ஆட்கொண்டது அது. தேவதை போல் தோன்றிய அந்த பெண்ணுக்காகஎன்னவெல்லாம் செய்திருக்கிறேன்,
பைத்தியக்காரனைப்போல் அலைந்திருக்கிறேன்.கண்விழித்து கவிதை எழுதி...காதல் கைகூடும் நேரம்
அப்பாவிற்கு தெரிந்ததால் கனவாகிப்போனது அது.
பின் அப்பா சிபாரிசில் வேலை, கல்யாணம், மகன் என்று வாழ்க்கைதான் எத்தனை வேகமாகஓடி விட்டது.
நல்ல மனைவிதான் அவள், எதிர்த்துக்கூட பேசியதில்லை எப்போதும். எப்படியோஎனக்கு முன் நல்லபடியாக போய் சேர்ந்து விட்டாள்.ஆனாலும் அந்த முதல் காதல்.,நினைக்கும் போதெல்லாம்சில துளிகள் கண்ணீரை விழியோரம் வரவழைத்து விடுகிறது.
பழைய நினைவோடும், கனத்த மனதோடும் பூங்காவைவிட்டு வருகிறேன்; வெளியே பெட்டிக்கடை பெட்டி ரேடியோவில்
சுசிலாவின்“ நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை...” பாடல்என் நெஞ்சில் நிறைகிறது....
ச்சும்மா சிறுகதை எழுதிப்பார்ப்போமேன்னு...
Sunday, August 31, 2008
Tuesday, August 26, 2008
பாரதி என்கிற நெருப்பு...

உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அந்த முண்டாசு கட்டிய முறுக்கு மீசையை...
அவன் மீசை மட்டும் அடர்த்தியில்லை; கவிதையும் தான்அவன் வார்த்தைகளை கொண்டு அல்ல
தீப்பொறி கொண்டுகவிதை எழுதியவன்..
அவன் எழுத்தின் கூர்மைக்கு முன்
அன்னியரின் துப்பாக்கிகள் தோற்றுப்போயின..
அவன் வாள் கொண்டு
அல்லவார்த்தைகள் கொண்டு போராடியவன்..
சிட்டு குருவியையும் சினேகித்தவன்..
அவனுடைய பாட்டு நெருப்பு பற்ற
வைத்தவிடுதலை தீ பற்றி எரிந்தது நாடெங்கும்..
எல்லோரையும் போல மறந்துவிட்டோம் அவனையும்..
ஓரு வேளைஅவனுடைய பிறந்த நாளுக்கோ
நினைவு நாளுக்கோ
அரசு விடுமுறை அளித்தால்
பலருக்கு அவனை நினைவு வரலாம்...
Monday, August 25, 2008
Sunday, August 24, 2008
என் மகள்....
நான்:
பாப்பா, தூங்கலியா? சரி. நான் ஒரு கதை சொல்லவா?
ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம்,
ஒரு நாளு அதுக்கு ரொம்ப தாகம் எடுத்துதாம்.
ரொம்ப தூரம் பறந்து பறந்து பார்த்தப்ப ஒரு பானையில
கொஞ்சமா தண்ணி இருந்துச்சாம், காக்காவுக்கு கழுத்து எட்டல,
அதனால பக்கத்ல இருந்து கல்ல பொறுக்கி பானையில
போட்டுச்சாம், தண்ணி மேல வந்துச்சா,
காக்கா இப்ப ஈசியா தண்ணிய குடிச்சிச்சாம்.
என் மகள்:
அட போங்கப்பா, அந்த காக்காவுக்கு ஒண்ணுமே தெரியல, ஓரு ஸ்ட்ரா கொண்டு வந்தா
ஈசியா குடிக்கலாம் இல்ல...
Saturday, August 23, 2008
ஹைக்கூ....

1. பூஞ்சோலையில் அவள்
வெட்கப்பட்டு தலை குனிந்த்ன பூக்கள்.
2.இந்த பாடல் பிடிக்கும் என்றாள்
எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன் நான்.
3. என்னால் எழுத முடிந்த சிறிய கவிதை
அவளின் பெயர்....
4.எந்த ராகத்தில்
சேர்ப்பது என்னவளின் கொலுசொலியை...
வெட்கப்பட்டு தலை குனிந்த்ன பூக்கள்.
2.இந்த பாடல் பிடிக்கும் என்றாள்
எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன் நான்.
3. என்னால் எழுத முடிந்த சிறிய கவிதை
அவளின் பெயர்....
4.எந்த ராகத்தில்
சேர்ப்பது என்னவளின் கொலுசொலியை...
எனக்கு பிடித்த பாரதி

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்
போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

வணக்கம். பிளாக் உலகிற்கு ஒரு புதிய உறவு. என்னையும் ஆதரிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்முதல் அடியை வைக்கிறேன்,...
Labels:
வணக்கம்
Subscribe to:
Posts (Atom)