Sunday, August 31, 2008

நெஞ்சம் மறப்பதில்லை

தற்போதெல்லாம் ஈசி சேரும் கைத்தடியும் மட்டுமே
துனையாகி போனது எனக்கு.பேத்திக்கு கதை சொல்லி தூங்க செய்வதும், காய்கறி வாங்கி வருவதும் தலையாய பணியாய்தந்திருக்கிறாள் மருமகள். மனைவி சொல்லே சரி என தினசரி கூடஅதிக செலவென்று நிறுத்திய மகன்.காலை காபியும் காய்கறி கடையும், மதிய உணவும் சிறு தூக்கமும் என்று பகல் பொழுது ஓடும்.மாலையை எதிர்பார்த்து காத்திருக்க்கும்எனக்கு அந்த பூங்கா தான் உற்ற துனைவன். என் சோகத்தை, சுகத்தை எல்லாம் இங்கிருக்கும்ஒவ்வொரு மரமும் செடியும் அறியும், அவைகளோடு நான் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.இன்றும் அப்படிதான்,
இதோ அதே பார்க்கில்அதே பென்ச்சில் அமர்ந்திருக்கிறேன்.
வாழ்க்கை எவ்வாறெல்லாம் மாறி விட்டது?.
நினைத்துப்பார்க்கிறேன், என் பழைய நாட்களை..
எத்தனை இனிமையான வாழ்க்கை அது.
சுவையான பள்ளிக்கூட நாட்கள்; ஆற்றில் அடித்துமகிழ்ந்த நீச்சல், இரண்டாமாட்ட சினிமா; அப்பாவின் கண்டிப்பு, அம்மாவின் அன்பு,
அப்புறம்அந்த கல்லூரி நாட்கள், அதில் தோன்றிய முதல் காதல்!!!.
ஆமாம், இந்த காதல்தான் எத்தனை விசித்திரம், எல்லோரையும் போல என்னையும்ஆட்கொண்டது அது. தேவதை போல் தோன்றிய அந்த பெண்ணுக்காகஎன்னவெல்லாம் செய்திருக்கிறேன்,
பைத்தியக்காரனைப்போல் அலைந்திருக்கிறேன்.கண்விழித்து கவிதை எழுதி...காதல் கைகூடும் நேரம்
அப்பாவிற்கு தெரிந்ததால் கனவாகிப்போனது அது.
பின் அப்பா சிபாரிசில் வேலை, கல்யாணம், மகன் என்று வாழ்க்கைதான் எத்தனை வேகமாகஓடி விட்டது.
நல்ல மனைவிதான் அவள், எதிர்த்துக்கூட பேசியதில்லை எப்போதும். எப்படியோஎனக்கு முன் நல்லபடியாக போய் சேர்ந்து விட்டாள்.ஆனாலும் அந்த முதல் காதல்.,நினைக்கும் போதெல்லாம்சில துளிகள் கண்ணீரை விழியோரம் வரவழைத்து விடுகிறது.

பழைய நினைவோடும், கனத்த மனதோடும் பூங்காவைவிட்டு வருகிறேன்; வெளியே பெட்டிக்கடை பெட்டி ரேடியோவில்
சுசிலாவின்“ நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை...” பாடல்என் நெஞ்சில் நிறைகிறது....


ச்சும்மா சிறுகதை எழுதிப்பார்ப்போமேன்னு...

2 comments:

ஆயில்யன் said...

//ச்சும்மா சிறுகதை எழுதிப்பார்ப்போமேன்னு...//


இனி ச்சும்மா சிறுகதை இல்ல, டைரக்டா நீங்க சிறுகதை எழுதலாம்
ஒ.கே :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணா, நன்றி, தாங்களின் தடம் பதித்த சுவடுகளின் வழியே நானும் வர முயற்சி செய்கிறேன்.