Friday, October 10, 2008

ஏன்?...எதற்கு?...எப்படி?யார்?...


வலையுலக சிங்கங்களே, பதிவெழுதும் பண்பாளர்களே...
மயிலைப்பார்த்து வான்கோழி சிறகு விரித்த கதையாக
நானும் ப்பிளாக் தொடங்கி எழுத வந்துவிட்டேன். ஆனால் பாருங்கள்
இன்னும் சரியாக விடை தெரியாத கேள்விகள் சில உள்ளன.
பதில் தெரிந்தால் கூறுங்களேன்...

1. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி, படிக்கிற மாதிரி பதிவெழுதுவது எப்படி?
(இதற்கு ஆயில் பதில் சொல்லனும்)

2. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடும் பதிவருக்கு வேறு வேலை ஒன்னும் இருக்காதா?
(இதுக்கு ப்திவு வள்ளல் லக்கி பதில் சொல்லனும்)

3. ஒரு பதிவ போட்டுட்டு கமெண்ட் வந்திருக்கா, வந்திருக்கான்னு பார்க்க மனசு அடிச்சிக்குதே ஏன்?
(கமெண்ட் போடாதவங்க பதில் சொல்லனும்)

4.தமிழ் மணம் சூடான இடுகையில் வரனும்னா எழுத வேண்டியது எப்படி?

5. நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?

6. கும்மி, மொக்கை -சரியான விளக்கம் என்ன?
(நிஜமா நல்லவருக்கு தெரிந்திருக்கும்)

7.பதிவர் சந்திப்பை பற்றி பதிவெழுதும் பதிவர்கள் மறக்காம்ல் என்ன சாப்பிட்டார்கள்
என்பதையும் எழுதுகிறார்களே அது ஏன்?
(அண்ணன் தமிழ்ப்ரியன் பதில் வைத்திருக்கலாம்)

8. ப்பிளாக், பதிவு, கமெண்ட் இப்படியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தால்
ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
( அண்ணன் அபிஅப்பா பதில் சொல்லுங்ளேன்)

9. அலுவலக நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பிளாக் படிக்க வழி என்ன?
(வேலைக்கு டிமிக்கி அடித்து பிளாக் படிக்கும் நல்லவர்களே சொல்லுங்க)

10. இதில் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்த பதிவருக்கு என்ன பட்டமளிக்கலாம்?

11. இந்த மொக்க பதிவ படிப்பவர்களுக்கு கோபம் வருமா?

12. அதிகபட்சம் இந்த பதிவுக்கு எத்தன பின்னூட்டம் கிடைக்கும்?

ஹி ஹி : சில பதிவர்கள் பதிவுக்கு கீழே ”டிஸ்கி” எழுதுவாங்க., அந்த டிஸ்கி எல்லாம் சேர்த்து ஒரு பதிவா போட்டுட்டோம்ல... இப்ப சொல்லுங்க ஒரு பதிவருக்கு உள்ள தகுதி எனக்கும் வந்துட்டுல்ல...

43 comments:

ஆயில்யன் said...

//இந்த மொக்க பதிவ படிப்பவர்களுக்கு
கோபம் வருமா?//


ச்சே!
ச்சே!

அப்படியெல்லாம் 1ம் வர்ல!

அண்ணே உங்க அட்ரஸ் கொடுத்தா நல்ல இருக்கும் :)))))))))))))))))

ஆயில்யன் said...

//நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

அதுதான் காதல்!

மொக்கை பிகரா இருந்தாலும் அது நம்ம பிகர்தானேன்னு கூட தோண வைக்கும்ல அது மாதிரிதான் :))))))))))))))

ஆயில்யன் said...

//பதிவர் சந்திப்பை பற்றி பதிவெழுதும் பதிவர்கள் மறக்காம்ல் என்ன சாப்பிட்டார்கள் என்பதையும் எழுதுகிறார்களே அது ஏன்?
(அண்ணன் தமிழ்ப்ரியன் பதில் வைத்திருக்கலாம்)//

சில சமயம் நொம்ப டென்ஷனான விவாதம் வந்தா யேய்ய்ய் சோத்தை போடுங்கடா வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்புறேன் நானுன்னு சொல்லிட்டு எஸ்ஸாக முடியும்ல அதுக்குத்தான் :)))))

ஆயில்யன் said...

// அலுவலக நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பிளாக் படிக்க வழி என்ன?//

இது நொம்ப தப்பு ராசா!

அலுவலக நேரத்தில் எல்லாருக்கும் தெரியறமாதிரிதான் படிக்க முடியும் நீங்க அப்படியே டிரைப்பண்ணி பாருங்க
அப்புறம் ஈசியாவே தெரிஞ்சுடும் உங்களுக்கு பதில்

ஆயில்யன் said...

சாரி போன கமெண்ட்ல லாஸ்ட் வரி விட்டுப்போச்சு!
>>>>>>>>>>>>>>>>>>>>>
உங்களுக்கு பதில் ஆளை மாத்திவிட்டுடுவாங்க :))))

ஆயில்யன் said...

// இதில் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்த பதிவருக்கு என்ன பட்டமளிக்கலாம்?///

பதில் பதிந்த பதிவர்ன்னு கொடுக்கலாம் :))))

ஆயில்யன் said...

//அதிகபட்சம் இந்த பதிவுக்கு எத்தன பின்னூட்டம் கிடைக்கும்?///


அது பின்னூட்டம் இடுறவங்களுக்கே தெரியாதே எப்படியப்பு உமக்கு தெரியும்!

வரும் வரும்!

நல்லாவே கல்லா கட்டிடலாம் :))))

ஆயில்யன் said...

/நாந்தேன்., மொக்கச்சாமி வந்திருகேன்ல..///


இன்னும்மாய்யா நீ போகல ?????????

MSK / Saravana said...

சபாஷ்.. சரியான கேள்விகள்.. வர்ட்ட்டா..

நிஜமா நல்லவன் said...

/6. கும்மி, மொக்கை -சரியான விளக்கம் என்ன?
(நிஜமா நல்லவருக்கு தெரிந்திருக்கும்)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

அதுதான் காதல்!

மொக்கை பிகரா இருந்தாலும் அது நம்ம பிகர்தானேன்னு கூட தோண வைக்கும்ல அது மாதிரிதான் :))))))))))))))/

ரிப்பீட்டேய்...!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

அதுதான் காதல்!

மொக்கை பிகரா இருந்தாலும் அது நம்ம பிகர்தானேன்னு கூட தோண வைக்கும்ல அது மாதிரிதான் :))))))))))))))////

அண்ணே! வாழ்த்துகள்... ;)))

Thamiz Priyan said...

///1. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி, படிக்கிற மாதிரி பதிவெழுதுவது எப்படி?
(இதற்கு ஆயில் பதில் சொல்லனும்)///
அவர் பதில் சொல்லாம போய்ட்ட்டாரே?.. ;)

Thamiz Priyan said...

///3. ஒரு பதிவ போட்டுட்டு கமெண்ட் வந்திருக்கா, வந்திருக்கான்னு பார்க்க மனசு அடிச்சிக்குதே ஏன்?
(கமெண்ட் போடாதவங்க பதில் சொல்லனும்)///

நான் அவனில்லைப்பா ... ;)

Thamiz Priyan said...

///4.தமிழ் மணம் சூடான இடுகையில் வரனும்னா எழுத வேண்டியது எப்படி?////
ஏதாவது பிரபல பதிவருக்கு கடிதமோ, செக்ஸியான நடிகை படமோ போடுங்க வரலாம்

Thamiz Priyan said...

///5. நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

இது ஒரு வகையான வியாதி மாதிரி தெரியுதுப்பா

Thamiz Priyan said...

///7.பதிவர் சந்திப்பை பற்றி பதிவெழுதும் பதிவர்கள் மறக்காம்ல் என்ன சாப்பிட்டார்கள்
என்பதையும் எழுதுகிறார்களே அது ஏன்?
(அண்ணன் தமிழ்ப்ரியன் பதில் வைத்திருக்கலாம்)///

நானா எழுதலை... எல்லாரும் கேட்டாங்க சொல்ல வேண்டி வந்தது.

Thamiz Priyan said...

///8. ப்பிளாக், பதிவு, கமெண்ட் இப்படியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தால்
ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
( அண்ணன் அபிஅப்பா பதில் சொல்லுங்ளேன்)///
ஹிஹிஹிஹி

Thamiz Priyan said...

///9. அலுவலக நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பிளாக் படிக்க வழி என்ன?
(வேலைக்கு டிமிக்கி அடித்து பிளாக் படிக்கும் நல்லவர்களே சொல்லுங்க)////
இதுவும் அலுவலக நேரத்தில் இணையத்தில் இருப்பவர்கள் தான் சொல்லனும்... கேள்வி சுடருக்கே திருப்பி அனுப்பப்படுகிண்ரது

Thamiz Priyan said...

///10. இதில் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்த பதிவருக்கு என்ன பட்டமளிக்கலாம்?///
மொக்கைப் பதிவர் ???????

Thamiz Priyan said...

///11. இந்த மொக்க பதிவ படிப்பவர்களுக்கு கோபம் வருமா?///
மொக்க பதிவர்களுக்கு வராதுப்பா

Thamiz Priyan said...

//12. அதிகபட்சம் இந்த பதிவுக்கு எத்தன பின்னூட்டம் கிடைக்கும்?////
நோ ஐடியா!

லக்கிலுக் said...

புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள் சுடர்மணி!

//2. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடும் பதிவருக்கு வேறு வேலை ஒன்னும் இருக்காதா?
(இதுக்கு ப்திவு வள்ளல் லக்கி பதில் சொல்லனும்)
//

தோன்றியபோதெல்லாம் எழுதி டிராஃப்ட்ஸில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யலாம். ஒரே நாளில் மூன்று நான்கு பதிவெழுதி மீதி நாட்களில் பதிவெழுத சரக்கில்லாமல் கஷ்டப்பட வேண்டாம்.

நான் பொதுவாக பதிவெழுதுவது இரவு ஒன்பது டூ பத்து. ஆனால் பதிவது மறுநாள் காலையில்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க ஆயில் அண்ணே வண்க்கம்...

கோபம் வராதப்பவே அட்ரஸா? அப்ப கோவம் வந்தா என்னோட நிலமை?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”ஆயில்யன் said...
//நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

அதுதான் காதல்!

மொக்கை பிகரா இருந்தாலும் அது நம்ம பிகர்தானேன்னு கூட தோண வைக்கும்ல அது மாதிரிதான் :)))))))))))))) “

அண்ணே காக்கைக்கும் தன் பிள்ளை பொன்னுதான..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”சில சமயம் நொம்ப டென்ஷனான விவாதம் வந்தா யேய்ய்ய் சோத்தை போடுங்கடா வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்புறேன் நானுன்னு சொல்லிட்டு எஸ்ஸாக முடியும்ல அதுக்குத்தான் :)))))”

எப்படி இருந்தாலும் நம்ம கடமைய செய்துடனும் இல்லன்னே...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

” ஆயில்யன் said...
சாரி போன கமெண்ட்ல லாஸ்ட் வரி விட்டுப்போச்சு!
>>>>>>>>>>>>>>>>>>>>>
உங்களுக்கு பதில் ஆளை மாத்திவிட்டுடுவாங்க :))))”

என்னாது ஆள மாத்திடுவாய்ங்களா?

உள்ளதும் போய்டுமே?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...


அது பின்னூட்டம் இடுறவங்களுக்கே தெரியாதே எப்படியப்பு உமக்கு தெரியும்!

வரும் வரும்!

நல்லாவே கல்லா கட்டிடலாம் :))) “

நல்ல வியபாரம்ன்னே, பாக்கலாம் எவ்வளவு லாபம் கிடைக்கும்ன்னு?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”ஆயில்யன் said...
/நாந்தேன்., மொக்கச்சாமி வந்திருகேன்ல..///


இன்னும்மாய்யா நீ போகல ?????”

இப்பதானப்பு வந்துருக்கோம், ஒரு வழி பண்ணாம போகமாட்டோமப்பு...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

” Saravana Kumar MSK said...
சபாஷ்.. சரியான கேள்விகள்.. வர்ட்ட்டா”

வருகைக்கு நன்றி அய்யா...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

” நிஜமா நல்லவன் said...
/6. கும்மி, மொக்கை -சரியான விளக்கம் என்ன?
(நிஜமா நல்லவருக்கு தெரிந்திருக்கும்)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் “

அட ஆமான்னே, உங்கள விட்டா இதுக்கு சரியான பதில் வேற யாருக்கு தெரியும்?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"தமிழ் பிரியன் said...
///ஆயில்யன் said...

//நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

அதுதான் காதல்!

மொக்கை பிகரா இருந்தாலும் அது நம்ம பிகர்தானேன்னு கூட தோண வைக்கும்ல அது மாதிரிதான் :))))))))))))))////

அண்ணே! வாழ்த்துகள்... ;)))"

வாங்க தமிழண்ணே, வாழ்த்துக்கள் எதுக்குன்னு புரியல, ஏதோ உள்கூத்து இருக்க்கும் போல...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"தமிழ் பிரியன் said...
///1. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி, படிக்கிற மாதிரி பதிவெழுதுவது எப்படி?
(இதற்கு ஆயில் பதில் சொல்லனும்)///
அவர் பதில் சொல்லாம போய்ட்ட்டாரே"

அவரு போகனும்ன்னு நினைச்சாலும் அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா என்ன?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”பிரியன் said...
///4.தமிழ் மணம் சூடான இடுகையில் வரனும்னா எழுத வேண்டியது எப்படி?////
ஏதாவது பிரபல பதிவருக்கு கடிதமோ, செக்ஸியான நடிகை படமோ போடுங்க வரலாம்”

பிரபல பதிவருக்கு கடிதமா?

அப்ப உங்களுக்கு ஒரு கடிதம் எழுதிட வேண்டியதுதான்.. :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”தமிழ் பிரியன் said...
///5. நாம எழுதிய பதிவயே திரும்ப படிகத்தோனுதே ஏன்?///

இது ஒரு வகையான வியாதி மாதிரி தெரியுதுப்பா”

வியாதியா? பயமுறுத்தாதிங்கண்ணே... :(

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”தமிழ் பிரியன் said...
///10. இதில் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்த பதிவருக்கு என்ன பட்டமளிக்கலாம்?///
மொக்கைப் பதிவர் ?????? “

நானெல்லாம் already மொக்கச்சாமியாதான இருக்கேன்...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”தமிழ் பிரியன் said...
///11. இந்த மொக்க பதிவ படிப்பவர்களுக்கு கோபம் வருமா?///
மொக்க பதிவர்களுக்கு வராதுப்பா”

அப்ப நிறைய பதிவர்களுக்கு கோபம் வராதுன்னு சொல்றீங்க அதான... :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”தமிழ் பிரியன் said...
//12. அதிகபட்சம் இந்த பதிவுக்கு எத்தன பின்னூட்டம் கிடைக்கும்?////
நோ ஐடியா!”

உங்கள மாதிரி நல்ல உள்ளங்களால கணிசமா தேறிடிச்சி.. :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க லக்கி சார், முதல் வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி...

பதிவ எழுதி ட்டிராப்டில் போட்டு வைக்கனுமா? ஒரு பதிவுக்கே ரூம் போட்டு யோசிக்கனும்ன்னே...

நானெல்லாம் உங்கள மாதிரி..., :(

மயில பார்த்து வான்கோழி... :)

தமிழ் அமுதன் said...

கொஞ்சம் நல்லவனா? அநியாயத்துக்கு ரொம்ப நல்லவனா இருக்கீங்க ?

gulf-tamilan said...

12. அதிகபட்சம் இந்த பதிவுக்கு எத்தன பின்னூட்டம் கிடைக்கும்?
start 1,2, 3.

gulf-tamilan said...

me the 42?

ராமலக்ஷ்மி said...

புதிய வலைப்பூவுக்கு பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் சுடர்மணி.

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் சுவாரஸ்யம். தொடக்கத்தில் எல்லோருக்கும் இதே நிலைமைதான். பிறகு செட்டில் ஆகி விடுவீர்கள். கவலை வேண்டாம். லக்கிலுக் கொடுத்துள்ள யோசனை சிறப்பானது. டிராஃப்ட் செய்து வைத்து முயன்று பாருங்கள். நான் கூட ஒரு வார விடுப்பிலிருந்து நேற்றுதான் திரும்பினேன். டிராஃப்ட் செய்து வைத்திருந்ததால் சுலபமாக வேலை முடிந்தது.