1999ம்மாண்டு கல்லூரி படிக்கும்போது சிறுவர் சிறுமிகளை
பள்ளிக்கு அழைத்து சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி ஒரு
சின்ன மொட்டு உயிரிழந்தது. அப்போது சிந்திய கண்னிர் துளிகளில்
ஒரு கவிதைத்துளி...
ஒர் அம்மாவின் கண்ணீர்
சாவி கொடுக்க நீயின்றி தவிக்கிறது
கரடி பொம்மை;
நீ சுவற்றில் எழுதிய கிறுக்கல்கள் நிற்கின்றன
முற்றுபெறாமலேயே;
நீ செல்லங்கொண்டாடிய பொம்மைகளைப் போல
நானிருக்கிறேன் நீயின்றி;
நீ துளிர் கிள்ளிய ரோஜாச்செடி உனக்கான
ஒரு பூவை பூத்து சூடிக்கொள்ள நீயின்றி
உதிர்ந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு இதழாக..
நீ ஓட்டிய மூன்று சக்கர சைக்கிள்
மூலையில் காத்திருக்கிறது உன் வரவை நோக்கி...
உயிரற்ற இவைகளின் வரிசையில் சேர்ந்து கொண்டிருக்கிறேன்
நடைபிணமாய் நானும்...
ஆனாலும் கண்ணே இன்னும் காதுகளில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.,
நீ கடைசியாய் சொன்ன வார்த்தைகள்;
”அம்மா, ப்ளிஸ்ம்மா, இன்னைக்கு மட்டும்
ஸ்கூல் போகலம்மா”
வருத்தம் – 1 : இன்னும் கிராமப்புறங்களில் 10 பேர் அமரக்கூடிய வாகனத்தில்
50 சிறார்களை அழைத்து செல்கிறார்கள்.
வருத்தம் – 2 : தன் பிள்ளைகள் ஆங்கில வழி படிக்க வேண்டும் என்று
ஆசைப்படும் பெற்றோரே இதைப்பற்றி கவலைப்படாமல்
அனுப்புவது.
Tuesday, October 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
:((
//நீ சுவற்றில் எழுதிய கிறுக்கல்கள் நிற்கின்றன
முற்றுபெறாமலேயே;//
:(
ஆயில்யன் said...
//நீ சுவற்றில் எழுதிய கிறுக்கல்கள் நிற்கின்றன
முற்றுபெறாமலேயே;//
:(
என்ன செய்யிறது அண்னே, இன்னும் இந்த அவலம் தொடர்கிறதே!
ஒவ்வொரு வரியிலும் அந்த அன்னை வடிக்கும் கண்ணீரின் வெப்பம் சுடுகிறது சுடர்மணி.
காலம்தான் ஆற்ற வேண்டும் என்பார்கள். காலம் ஆற்றுவதேயில்லை இந்த வலிகளை.
//இன்னும் கிராமப்புறங்களில் 10 பேர் அமரக்கூடிய வாகனத்தில்
50 சிறார்களை அழைத்து செல்கிறார்கள்.//
ஏன் நகர்ப்புறங்களிலும் 4 சிறுவர்கள் அமரக் கூடிய ஆட்டோவில் எத்தனை பேரை அடைத்துக் கொண்டு போகிறார்கள் தெரியுமா? பெற்றோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வணக்கம் ராமலட்சுமி அக்கா,
வருகைக்கு நன்றி.
பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்கும் நாம் இது போன்ற நெருக்கடிகளையும் சாமாளிக வேண்டுமல்லாவா?
//நீ கடைசியாய் சொன்ன வார்த்தைகள்;
”அம்மா, ப்ளிஸ்ம்மா, இன்னைக்கு மட்டும்
ஸ்கூல் போகலம்மா”//
வலிக்கிறது..
என்ன செய்யிறது அண்னே, இன்னும் இந்த அவலம் தொடர்கிறதே!
வாங்க கவி சரவண குமார்.,
வருகைக்கு நன்றி... :)
சுடர், கவிதை சுடுகின்றது.
// தமிழ் பிரியன் said...
சுடர், கவிதை சுடுகின்றது.//
நன்றி தமிழ்ழண்ணா, என்ன செய்வது உண்மை சுடத்தான் செய்கிறது.
:-)
என் பிள்ளைகள் போயிருந்த பள்ளி வாகனம் தலை குப்புற விழுந்ததாயும், பிள்ளைகளுக்கு அடிபட்டிருப்பதாயும் கேள்விப்பட்டு, புனித யாத்திரையில் இருந்த நானடைந்த துயரம் நினைவுக்கு வருகிறது.
இன்னும் இது போன்ற அபாயங்கள் நீங்கின பாடில்லை என்பதுதான் அவலம்.
நல்ல கவிதை
//சுல்தான் said...
என் பிள்ளைகள் போயிருந்த பள்ளி வாகனம் தலை குப்புற விழுந்ததாயும், பிள்ளைகளுக்கு அடிபட்டிருப்பதாயும் கேள்விப்பட்டு, புனித யாத்திரையில் இருந்த நானடைந்த துயரம் நினைவுக்கு வருகிறது.
இன்னும் இது போன்ற அபாயங்கள் நீங்கின பாடில்லை என்பதுதான் அவலம்.//
வணக்கம் சுல்தான் சார். எல்லா அவலங்களும் ஒழிய ஆண்டவனை ப்ராத்திப்போம் :)
:(
ஒரு தாயின் உணர்ச்சிகளை அற்புதமாய் சொல்லிருக்கீங்க...
அந்த குட்டிப்பாப்பாவுக்காவும், அம்மாவுக்காவும் மனசு அழுது...
:*(
Post a Comment