Thursday, October 16, 2008

மாப்பு தமிழண்ணன் வச்சிட்டாரு ஆப்பு!



என்னமோ கேள்வி பதிலாம். படிச்சிபாருங்க!ப்ளாக் உலகின் தலையெழுத்து என்னோட பதிலையும்படிங்க...

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்று தெரியவில்லை. ஆனால் சிறு வயது முதலேசூப்பர்ஸ்டார் மேல் ஒரு நீங்கா பற்று உண்டு.உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று வசனமெல்லாம் சொல்லிபரிசா அப்பா முதுகுல நாலு சாத்து கொடுத்தாரு, நினைவு தெரிந்து பார்த்தபடம் தலைவரின் “தளபதி”. ஸ்கூல் போகமல் அடம் பிடித்து பின் அப்பாவின்சைக்கிளில் பர்ஸ்ட் ஷோ போனோம். தேங்காய் பண் சாப்பிட்டு கொண்டேதளபதி பார்த்தது ஒரு இனிய நினைவு.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அபுதாபியில் மிகுந்த பணிசுமைக்கிடையில் நண்பர்களின்வற்புறுத்துதலின் பேரில் தசாவதாரம் இரவு 1மணி காட்சிசென்று வந்தோம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்பிரமணியபுரம். திருட்டுத்தனமாக அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்துபார்த்தோம். நல்ல படங்களை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு விசிடி மற்றும்இனையத்தின் மூலமும் பார்க்கிறோமே என்ற சின்ன குற்றயுனர்ச்சியுடன் பார்த்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்.ஒரு 20-25 முறை பார்த்திருக்கிறேன். ஒரு வேலை அந்த சமயத்தில் காதல் நம்பள ஆட்கொண்டு பாடாய் படுத்தியதால் இருக்கலாம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நமக்கு சினிமா - அரசியல் இரண்டிலுமே ஆழ்ந்த பற்று கிடையாது.ஆகையால் தாக்குமளவிற்கு ஒன்னுமில்ல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
S.B.B. மூச்சு விடாம பாடிய சிகரம் படத்தின் மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ? என்ற பாடல். உண்மையில் தொழில்னுட்பஉதவியுடன் தான் அந்த பாடல் பாடப்பட்டுள்ளது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்டதைப்படிக்கும் பழக்கமுள்ளதால் சினிமாவும் அடக்கம்.

7. தமிழ்ச்சினிமா இசை?
இளையராஜாவை ரசித்து, உருகி ஒடிய காலம் ஒன்று உண்டு.மெல்லிசை பாடல்கள் அதிக விருப்பம். சரோஜா சாமான் நிக்காலோ போன்ற துள்ளிசை பாடல்கள் என்றால் சற்றே அதிக தூரம்.மெல்லிய மனசு என்ன பண்னுறது?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சினிமா உலகுடன் நேரடி தொடர்பு இல்லாமல் இருப்பதே எனக்கும் நல்லது;சினிமாவுக்கும் நல்லது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்னும் மேம்பட வேண்டும் என நினைக்கிறேன். சினிமாவை நம்பிஎத்தனையோ ஜீவன்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்தை கனவுகளை மனசிலும் பசியை வயிற்றிலும் சுமந்துஅலையும் பலரின் வாழ்க்கை ஒளி பெற வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இது ஒரு சிக்கலான கேள்வியோ?சினிமாவையே பேச்சாகவும் மூச்சாகவும் நினைக்கும் வாழ்க்கைஇருண்டு விடும். பத்திரிக்கை தொலைக்காட்சி பல நொடித்து போகும்.நம்ம தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள். அப்படியெல்லாம் விட மாட்டார்கள்.


சினிமா டிஸ்கி நினைவுகள்:
1. காதலிக்கும்போது யாருக்கும் தெரியாமல் தங்கமணியோடு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே கல்யானமாகிவிட்டது.

2. கல்யானமாகிப்பார்த்த முதல் படம்; சூர்யா-திரிஷா நடித்த மெளனம் பேசியதே!

3. கல்லூரி ஸ்ட்ரைக் அன்று லாரியில் கூட்டமாக ஏறி பியர்லெஸ் தியேட்டரில் படம் பார்த்த மறக்க முடியா நாட்கள்

4. சில தமிழக முதல்வர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா எங்கள் தங்கத்தலைவரயும் முதல்வராக்கும் என்கிற அசைக்க முடியா நம்பிக்கை.

5. என்னையும் சினிமா பற்றி எழுத அழைத்த அருமை அண்ணன் தமிழ்ப்ரியன் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.

6. சினிமாவ பத்தி பேசனும்ன்னு வந்தாச்சு, எங்க தலைவர் இல்லாமலா? அதான் நம்ம தலயோட போட்டோ.

30 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

http://urupudaathathu.blogspot.com/ said...

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்///

எனக்கும் அதே...

அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

// உருப்புடாதது_அணிமா said...
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்///

எனக்கும் அதே...

அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்//

வாங்க அணிமா சார். வருகைக்கு நன்றி!

ஆயில்யன் said...

//என்னமோ கேள்வி பதிலாம். படிச்சிபாருங்க!ப்ளாக் உலகின் தலையெழுத்து என்னோட பதிலையும்படிங்க...
//

வாசல்லையே உக்காந்துக்கிட்டு இப்படியெல்லாம் பயமுறுத்தப்படாது ஆமாம் சொல்லிப்புட்டேன் :(

ஆயில்யன் said...

தலைவர் படத்துக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் :)))

ஆயில்யன் said...

//சுப்பிரமணியபுரம். திருட்டுத்தனமாக அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்துபார்த்தோம். நல்ல படங்களை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு விசிடி மற்றும்இனையத்தின் மூலமும் பார்க்கிறோமே என்ற சின்ன குற்றயுனர்ச்சியுடன் பார்த்தேன்.///


தப்பில்ல தியேட்டர் மூலைக்கு மூலை இருக்கற ஆளுங்களே வீடியோவிலதான் பாக்குறாங்க!
(அது ஏன் படத்தில நடிச்ச அம்புட்டு பேரும் தியேட்டர்ல பார்த்தா சென்னையில தியேட்டர்களில் எம்புட்டு கூட்டம் நிரம்பும்???)

:))

ஆயில்யன் said...

//காதலுக்கு மரியாதை திரைப்படம்.ஒரு 20-25 முறை பார்த்திருக்கிறேன். ஒரு வேலை அந்த சமயத்தில் காதல் நம்பள ஆட்கொண்டு பாடாய் படுத்தியதால் இருக்கலாம்.
//

என்னது காதல் உங்களை ஆட்கொண்டதா? கேள்விப்பட்ட வரைக்கும் ஆள் கொண்டு விரட்டிஅடிச்சுத்துன்னுல்ல சொன்னாங்க :))))))

ஆயில்யன் said...

//காதலிக்கும்போது யாருக்கும் தெரியாமல் தங்கமணியோடு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே கல்யானமாகிவிட்டது.
/


அய்யோ பாவமே! (எப்பிடியெல்லாம் ஆசைப்பட்டிருக்காரு பாருங்க மக்கா!)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//ஆயில்யன் said...
தலைவர் படத்துக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் :)//

மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

ஸ்டார்ன்னு சொல்லுரவனெல்லாம்

சூப்பர்ஸ்டார் இல்ல!!!

ஆயில்யன் said...

//கல்யானமாகிப்பார்த்த முதல் படம்; சூர்யா-திரிஷா நடித்த மெளனம் பேசியதே!///


அதுக்கு பெறவு இன்னிக்கு வரைக்கும் மெளனமாய் பூரிக்கட்டை மட்டும்தான் பேசுதாம்ல :))))))

ஆயில்யன் said...

சாரி பூரிக்கட்டை இல்ல ராங்க் இன்போ கொடுத்ததுக்கு மன்னிக்கவும் அது சரியான இன்போ - குக்கர் கைப்பிடி (நங்குன்னு வைச்சா நல்ல பொங்கிடும் தலை) :)))

ஆயில்யன் said...

//கல்லூரி ஸ்ட்ரைக் அன்று லாரியில் கூட்டமாக ஏறி பியர்லெஸ் தியேட்டரில் படம் பார்த்த மறக்க முடியா நாட்கள்//

அதுதான் தெரியுமே! ஸ்ட்ரைக் நாள்ல மட்டும்தானா???? (ஒ நீங்க கொஞ்சமா நல்லவன்ல்ல)

:)))

Thamiz Priyan said...

///4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்.ஒரு 20-25 முறை பார்த்திருக்கிறேன். ஒரு வேலை அந்த சமயத்தில் காதல் நம்பள ஆட்கொண்டு பாடாய் படுத்தியதால் இருக்கலாம்.////
ஹிஹிஹி சேம் பிளட்.. அப்படியே அந்த காதல் கதையையும் சொல்றது...;)

ஆயில்யன் said...

//சில தமிழக முதல்வர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா எங்கள் தங்கத்தலைவரயும் முதல்வராக்கும் என்கிற அசைக்க முடியா நம்பிக்கை.///

வேணாம் ராசா! அவுரு பாட்டுக்கு நிம்மதியா இருக்கட்டும் ராசா நீங்களும் உங்க புள்ள குட்டிங்களோட நிம்மதியா இருங்க ஒ.கே :))))

ஆயில்யன் said...

//என்னையும் சினிமா பற்றி எழுத அழைத்த அருமை அண்ணன் தமிழ்ப்ரியன் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.///

என்னை அழைக்காமல் விட்டுவிட்டாலும் கூட நானும் வணக்கமும் நன்றியும் சொல்லிக்கிறேன் :))

ஆயில்யன் said...

//சினிமாவ பத்தி பேசனும்ன்னு வந்தாச்சு, எங்க தலைவர் இல்லாமலா? அதான் நம்ம தலயோட போட்டோ. //


கண்டிப்பா இருக்கோணும் :)))

Thamiz Priyan said...

///4. சில தமிழக முதல்வர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா எங்கள் தங்கத்தலைவரயும் முதல்வராக்கும் என்கிற அசைக்க முடியா நம்பிக்கை.////]
நான் கூட உங்க தலைவர் மாயவரத்து டி.ஆரோன்னு நினைச்சேன்.. ;)))

Thamiz Priyan said...

///1. காதலிக்கும்போது யாருக்கும் தெரியாமல் தங்கமணியோடு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே கல்யானமாகிவிட்டது.///
கல்யாணம் ஆனா தான் தங்கமணி... நல்ல வேளை தப்பிச்சோம்ன்னு சந்தோசப்படுங்க.. யாராவது பார்த்து அங்கேயே டின் கட்டி இருந்தா என்ன ஆயிருக்கும்ன்னு யோசிங்க.. ;)))))

rapp said...

short and sweetஆ சூப்பரா இருக்கு:):):) வாழ்த்துக்கள்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆகா!
ஏன்யா இந்த கொலவெறி!
நாளை முதல் பூரி நல்ல உண்வு இல்லை என்று தங்கமணியிடம் அறிவிகப்ப்டுகிறது!
குக்கர் சாப்பாடும் சரியில்லிங்கோவ்வ்வ்!

தப்பிச்சிக்கடா சுடரு, idea கொடுக்க நிறைய பேரு இருக்காங்க!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//
என்னது காதல் உங்களை ஆட்கொண்டதா? கேள்விப்பட்ட வரைக்கும் ஆள் கொண்டு விரட்டிஅடிச்சுத்துன்னுல்ல சொன்னாங்க :))))))//

அண்ணே ஆயிலுலன்னே! உண்மையெல்லாம் இப்படி பட்டுன்னு சொல்லப்புடாது!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//வேணாம் ராசா! அவுரு பாட்டுக்கு நிம்மதியா இருக்கட்டும் ராசா நீங்களும் உங்க புள்ள குட்டிங்களோட நிம்மதியா இருங்க ஒ.கே :))))//

ஓக்கேய்ய்ய்ய்ய்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//ஆயில்யன் said...
//என்னையும் சினிமா பற்றி எழுத அழைத்த அருமை அண்ணன் தமிழ்ப்ரியன் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.///

என்னை அழைக்காமல் விட்டுவிட்டாலும் கூட நானும் வணக்கமும் நன்றியும் சொல்லிக்கிறேன் :))//

உங்களை அழைத்தால் , இந்த வெளையாட்டுக்கு நான் வல்ல, என்னிய அத்துவிடிடூங்கன்னு சொல்லுவீங்க!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யே!
இப்படியெல்லாம் சொன்னா?

இருங்க உங்களுக்கு ஒரு

டண்டனக்கா பதிவு போடலாம்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//தமிழ் பிரியன் said...
///1. காதலிக்கும்போது யாருக்கும் தெரியாமல் தங்கமணியோடு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே கல்யானமாகிவிட்டது.///
கல்யாணம் ஆனா தான் தங்கமணி//

காதலியையே மனைவியாக பாவித்து
தங்கமணி என்று சொல்லிவிட்டேன் :)

இது ஒரு தெய்வீக காதல் :)

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு விவசாயி.
//4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்///

உங்கள யாரும் தாக்குனாங்களா?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//குடுகுடுப்பை said...
நல்லா இருக்கு விவசாயி.
//4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது என்ன சரியான காரணமென்று தெரியவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படம்///

உங்கள யாரும் தாக்குனாங்களா//

அட என்னாங்க இது? நம்பள தாக்க
எல்லாரும் வரிசைகட்டி வாராய்ங்க!

நம்ப பதிவால நொம்ப பாதிக்கப்டுறாய்ங்கன்னு நினைக்கிறேன்! :)

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
தலைவர் படத்துக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் :)))
\\

அண்ணே நீங்களா...

தமிழன்-கறுப்பி... said...

\\
காதலுக்கு மரியாதை திரைப்படம்.ஒரு 20-25 முறை பார்த்திருக்கிறேன். ஒரு வேலை அந்த சமயத்தில் காதல் நம்பள ஆட்கொண்டு பாடாய் படுத்தியதால் இருக்கலாம்.
\\

அட அப்ப நிறையக்கதை இருக்கும் போல இருக்கே...:)