Thursday, October 23, 2008

ஒர் தாய் மக்கள் நாம்!



வா நண்பா
உன்னோடு பேச வேண்டியிருக்கிறது!
இந்திய தாயின் மடியில் வாழும்
ஒர் தாய் மக்கள் நாம்!
நமக்குள் ஏனடா மதச்சண்டை
ஜாதீக்கலவரம்?

குண்டு வைக்க குரான் சொல்லியதா?

பயங்கரவாதத்தை பைபிளில் படித்தோமா?

பட்டாகத்தி கொண்டு கொல்ல
பகவத்கீதை பகர்கிறதா?

இன்று நீ உண்ட உணவு
நீ சண்டையிட்ட சகோதரன்
பயிரிட்டிருக்கலாம்!

நீ உடுத்தியிருக்கும் உடுப்பு
உன்னால் பாதிக்கப்பட்டவன்
நெய்திருக்கலாம்!

நீ விடும் சுவாசக்காற்று
இங்குதான் தோழா
சுழன்று கொண்டிருக்கிறது!

சாதீமத வெறி என்னும் மரம்
வெட்ட வெட்ட
துளிர்த்துக்கொண்டுதானிருக்கும்

வேரில் வென்னீர் ஊற்றுவோம்
புறப்படு நண்பா புயலென!

.

15 comments:

Unknown said...

அண்ணா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கவிதை..!! :))

//நீ சண்டையிட்ட சகோதரன்
பயிரிட்டிருக்கலாம்!
நீ உடுத்தியிருக்கும் உடுப்பு
உன்னால் பாதிக்கப்பட்டவன்
நெய்திருக்கலாம்!
நீ விடும் சுவாசக்காற்று
இங்குதான் தோழா
சுழன்று கொண்டிருக்கிறது!
சாதீமத வெறி என்னும் மரம்
வெட்ட வெட்ட
துளிர்த்துக்கொண்டுதானிருக்கும்
வேரில் வென்னீர் ஊற்றுவோம்
புறப்படு நண்பா புயலென!//

Ultimate..!! :))))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி ஸ்ரீமதி அக்கா!

உங்களை போல ஊக்கமளிப்பவர்கள் இருந்தால் மேலும் நன்றாக எழுதலாம்.

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க... அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து புதிய இந்தியாவைப் படைக்க பாடுபடுவோம். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்!

ராமலக்ஷ்மி said...

//நீ உடுத்தியிருக்கும் உடுப்பு
உன்னால் பாதிக்கப்பட்டவன்
நெய்திருக்கலாம்!//

மனதில் தைக்கும் மாதிரி சுருக்கமா நல்லா சொல்லியிருக்கீங்க சுடர்.

நேரம் இருந்தால் இதை வாசிக்க சில மணித்துளி ஒதுக்குங்கள்:
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html

சற்றே நீளமான கவிதைதான். ஆனால் உங்கள் கருத்தோடு ஒன்றியதால் பிடிக்கும் என நம்புகிறேன்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//தமிழ் பிரியன் said...
நல்லா எழுதி இருக்கீங்க... அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து புதிய இந்தியாவைப் படைக்க பாடுபடுவோம். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்!//

நன்றி தமிழ் அண்ணே, எல்லாம் உங்க வழினடத்துதல் தான்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வணக்கம் ராம் அக்கா, வருகைக்கு நன்றி!

ஆயில்யன் said...

நல்லா இருக்கு! :)

ஆயில்யன் said...

//ஏதாச்சும் சொல்லிட்டு போங்க...//


என்னாது இது?

ஏதாச்சும் சொல்லிட்டு போங்கன்னா ? எதோ இப்ப கொஞ்சம் நல்ல மூடுல இருந்தேன் நார்மல்லா போறேன்!

இதுவே டெரர் மூடுல இருந்தேன் பின்னூட்ட பெட்டி பறந்திடும்! சாக்கிரதை :))))))))))))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆயில்யன் said...
//ஏதாச்சும் சொல்லிட்டு போங்க...//


என்னாது இது?

ஏதாச்சும் சொல்லிட்டு போங்கன்னா ? எதோ இப்ப கொஞ்சம் நல்ல மூடுல இருந்தேன் நார்மல்லா போறேன்!

இதுவே டெரர் மூடுல இருந்தேன் பின்னூட்ட பெட்டி பறந்திடும்! சாக்கிரதை :))))))))))))

ஹி ஹி...

மாத்திட்டோமே...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்சம் நல்லவந்ன்னு சொல்லிட்டு ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்களே.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

// AMIRDHAVARSHINI AMMA said...
கொஞ்சம் நல்லவந்ன்னு சொல்லிட்டு ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்களே//

நிஜமாவா?

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கக்கா!

தமிழ் அமுதன் said...

நல்ல கவிதை
சுடர் மிகவும் அருமை!

Anonymous said...

//இன்று நீ உண்ட உணவு
நீ சண்டையிட்ட சகோதரன்
பயிரிட்டிருக்கலாம்!
நீ உடுத்தியிருக்கும் உடுப்பு
உன்னால் பாதிக்கப்பட்டவன்
நெய்திருக்கலாம்//

வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க.
ரெம்ப நல்லா இருக்கு கவிதை.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க ஜீவன்

வாங்க குந்தவை

வருகைக்கும் கமெண்ட்டுக்கும்

நன்றி!!

மாதவராஜ் said...

சுடர்!

பாராட்டுக்கள்.
உங்கள் உணர்வுகளை
கவிதை மூலம் அறிய முடிகிறது.
அதுவே உங்களை நெருக்கமாக உணர வைக்கிறது.
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.