Tuesday, October 28, 2008

தொட்டிலை ஆட்டும் கை


ஆண்களுக்கு இணையாக தங்களாலும் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும் என மதுரை "வளைகரங்கள்' நிரூபித்து வருகின்றன. அதற்காக நேர்மையான எந்த வேலையையும் செய்ய தயார் என தடாலடியாக களம் இறங்கியுள்ள இவர்கள் "லோடுமேன்'களாக லாரிகளில் சென்று கலக்கி வருகின்றனர்.

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என கேட்ட காலம் மலையேறி விட்டது. எத்துறையை எடுத்து கொண்டாலும் பெண்களின் பங்களிப்பு இன்று இன்றியமையாதது. "சுய உதவிக்குழுக்கள்' என்ற புதிய "யுக்தி' வெளியுலகிற்கு அவர்களை அடையாளம் காட்டியுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்காக இங்கு சத்துமாவு உருண்டைகளை பெண்கள் தயாரிக்கின்றனர்.மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள "பால்வாடி' மையங்களுக்கு எடுத்து சென்று சீருடை அணிந்த பெண் லோடுமேன்கள்விநியோகிக்கின்றனர். இவர்களும் சங்க உறுப்பினர்கள் தான்.கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது.சத்துமாவு உருண்டை தயாரிக்க தேவையான கோதுமை, வெல்லம்ஆகியவற்றை இவர்களே லாரியில் ஏற்றி, இறக்கி வருகின்றனர். மூட்டைகளை லாரியில் ஏற்றி, இறக்க முன்பு ஆண் லோடுமேன்களுக்கு அதிகபட்ச கூலியை கொடுத்து வந்தனர். இதனால் இவர்களது லாபத்தில் மாதம் தோறும் பெரும் தொகை "துண்டு' விழுந்தது. இக்கடினமான பணியை இவர்கள் தற்போது கற்று கொண்டுவிட்டதால் அந்த பணமும் இவர்களுக்கு கிடைக்கிறது.

செய்தியும் படமும்: தினமலர்.
தொட்டிலை ஆட்டும் கைதொல்லுலகை ஆளும் கைஎன்று பாடிய கவியின் வாக்குபொய்க்கவில்லை....
ஹி ஹி : இது நம்ம 25வது பதிவு. நம்ம எழுத்து
பலபேருக்கு பாதிப்ப ஏற்படுத்தினாலும் எழுதுறத
விடமாட்டோம்ல. பதிவெழுத உதவி வரும் அருமை
அண்ணன் ஆயிலுக்கும் அன்பு அண்ணன் தமிழ்ப்ரியனுக்கும்
வணக்கத்துடன் நன்றிகள்!

13 comments:

ஆயில்யன் said...

//சுய உதவிக்குழுக்கள்' என்ற புதிய "யுக்தி' வெளியுலகிற்கு அவர்களை அடையாளம் காட்டியுள்ளது.//

குழு கான்செப்டினை கிராமப்புற மக்களின் மனதில் கொண்டு வந்ததில் பெரும்பங்கு உண்டு இந்த சுய உதவிக்குழுக்களுக்கு :)

ஆயில்யன் said...

//இது நம்ம 25வது பதிவு. நம்ம எழுத்து
பலபேருக்கு பாதிப்ப ஏற்படுத்தினாலும் எழுதுறத
விடமாட்டோம்ல. பதிவெழுத உதவி வரும் அருமை
அண்ணன் ஆயிலுக்கும் அன்பு அண்ணன் தமிழ்ப்ரியனுக்கும்
வணக்கத்துடன் நன்றிகள்!/



வாழ்த்துக்கள் தம்பி!

(25 வது பதிவு அண்ணன் ஆயில்யன் முழு பேரு போட்டிருந்தா இன்னும் எம்புட்டு சந்தோஷமா இருந்திருக்கும் அதென்ன பாதியாவே கட் பண்றீங்க!)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி திரு.ஆயில்யன் அண்ணே.

ஆயில் என்று ஒரு உரிமையில எழுதிட்டேன்.. 50வது பதிவுல அடைபொழியோட சேர்த்து போட்டுடுவோம்!

நாணல் said...

:)) முதலில் என் வாழ்த்துக்கள்...
இது போன்ற நிகழ்வுகள் பெண்களால் எதையும் சாதிக்க முடியுமென தன்னம்பிக்கைகளை தருகின்றது...

ராமலக்ஷ்மி said...

இது போன்ற "சுய உதவிக்குழுக்கள்' மட்டுமின்றி இந்தத் தட்டு பெண்களுக்காக அந்தப் பெண்களையே உறுப்பினர்களாகக் கொண்டு சங்கங்கள் இயங்கி வருகின்றன பெங்களூரில். ரூபாய் இருபது முதல் முப்பதாயிரம் வரை கடன் உதவியும் செய்கிறார்கள் குறைந்த வட்டியில் இரண்டாண்டு காலத்தில் கட்டும் வகையில்.

உங்கள் இருபத்தைந்தாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...
//(25 வது பதிவு அண்ணன் ஆயில்யன் முழு பேரு போட்டிருந்தா இன்னும் எம்புட்டு சந்தோஷமா இருந்திருக்கும்//

அதானே!

சுடர்மணி said...
//ஆயில் என்று ஒரு உரிமையில எழுதிட்டேன்.. 50வது பதிவுல அடைபொழியோட சேர்த்து போட்டுடுவோம்!//

அதை இப்போதே எடிட் செய்ய எவ்வளவு நேரமாகும்? நல்லாக் கேளுங்க ஆயில்யன்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க நாணல், வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி ராம் அக்கா.

பார்த்திங்களா, நான் உங்க பேரயும் சுருக்கிட்டேன்..

Unknown said...

//தடாலடியாக களம் இறங்கியுள்ள இவர்கள் "லோடுமேன்'களாக லாரிகளில் சென்று கலக்கி வருகின்றனர்.//

துபையில் (காய்கனி சந்தையில், லோடு மேன் போல) கடுமையான வேலைகள் செய்து வாழ்ந்திருந்த ஆண்கள், தங்களது விசா நிறுத்தப்பட்டவுடன் ஊருக்குச் சென்று ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு மேல் உயிரோடிருப்பதில்லை. இது நாங்கள் நேரில் கண்டு கொண்டிருக்கும் உண்மை. எனவே இது போன்ற வேலைகளில் எங்களில் புதிய ஆண்களைக் கூட விடக்கூடாது என நினைத்திருக்கிற நேரம் இது.

இந்நிலையில் பெண்கள் இந்த மாதிரி கடுமையான வேலைகளில் ஈடுபடுவது அல்லது அவர்களை ஈடுபடுத்துவது பெருமையான விடயமாக நினைக்கத் தோன்றவில்லை நண்பரே.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க சுல்தான் சார்,

நம் நாட்டிலும் சித்தாள் வேலையிலும்

பெரிய பெரிய தொழிற்பேட்டை, சாயபட்டறைகளிலும் பெண்கள் கடிமையாகத்தான் உழைத்து வருகிறார்கள். நடுத்தர வர்க ஆண்களின் ஆனாதிக்கத்தால் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்களுக்கு இது போன்ற பணிகள் சிறிதேனும் மகிழ்ச்சியுண்டாக்குமென நினைக்கிறேன்!

Thamiz Priyan said...

பெண்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவையே... ஆனாலும் உடலளவில் பலவீனமான பெண்கள் இது போன்றவைகளை செய்வது அவர்களின் உடல்நலத்துக்கு நல்லதல்ல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

ஜியா said...

:)))

25kku vaazththukkal :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது நம்ம 25வது பதிவு. நம்ம எழுத்து
பலபேருக்கு பாதிப்ப ஏற்படுத்தினாலும் எழுதுறத
விடமாட்டோம்ல

25ஆவது பதிப்புக்கு வாழ்த்துக்கள். பாதிப்பாவது ஒன்னாவது . நீ எழுது ராசா. மத்த்தெல்லாம் பின்னூட்டத்தில பாத்துக்கலாம்.