Wednesday, October 29, 2008

விட்டுப்போனவளின் விடாத நினைவு!




சாலையோர மரத்தின்
உதிர்ந்திருக்கும் மலர்களில்
உனக்கான ஒன்றும் இருக்கலாம்.



ஓரம் தைத்த கைகுட்டையின்
ஒற்றை இன்சியலாய் இருக்கிறது
என் பெயர் மட்டும்.



உன்னையும் என்னையும்
நனைத்த மழைத்துளிகளை
எங்கு சென்று தேடுவது?



நீ மிதித்து போன சருகுகள்
பத்திரமாய் இருக்கின்றன
அலமாரி புத்தகங்களில்.



விட்டுப்போன உன்னை நினைத்து
புலம்புகின்றன என் கவிதைகள்.



உனக்கான கடிதங்களில்
கேள்விக்குறிகளால் நிரப்பி
எனக்கே அஞ்சல்
செய்து கொள்கிறேன்.



இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது !

21 comments:

ஆயில்யன் said...

/உனக்கான கடிதங்களில்
கேள்விக்குறிகளால் நிரப்பி
எனக்கே அஞ்சல்
செய்து கொள்கிறேன்.//

வாட் எ கிரேசி பாய் :)))

ராமய்யா... said...

Me the Firstu

நாணல் said...

:) kavithai nalla irukku

நாணல் said...

//உன்னையும் என்னையும்
நனைத்த மழைத்துளிகளை
எங்கு சென்று தேடுவது?//

thedunga thedunga..kidaikkum varai theditte irunga... ;)

Thamiz Priyan said...

இப்பதான் கவிதை எல்லாம் கொட்ட ஆரம்பிச்சு இருக்கு... உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கின்றோம்.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது !

தள்ளியே நிற்கட்டும்

சேர்ந்த காதலெல்லாம் அழுகின்ற போது, தள்ளி நின்று சிரிக்கிற காதல் எவ்வளவோ மேல்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//
ஆயில்யன் said...

வாட் எ கிரேசி பாய் :)))//

ஹி ஹி... நன்றி அன்னே!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//Raam said...
Me the Firstu//

வாங்க ராம், என்னோட பிளாக்க்ல அந்த இடம் திரு.ஆயில்யனுக்குகாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//நாணல் said...
:) kavithai nalla irukku//

நன்றிங்க. எத்தனியோ பேரு தேடிக்கிட்டேதான இருக்காங்க!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//தமிழ் பிரியன் said...
இப்பதான் கவிதை எல்லாம் கொட்ட ஆரம்பிச்சு இருக்கு... உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கின்றோம்.. :)//

நீங்க பக்கபலமா இருந்தா இன்னும் நிறைய எழுதலாம்!!!

Thamira said...

இன்னாபா இது கலக்கல் கவிதைகளா இருக்குது. எவ்ளோ கவிஞர்கள்பா பிளாகுல.. நம்பளோடதும் படிச்சுருக்கீங்கதானே..

இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது// பிரமாதம்ங்க.. ரசித்தேன்.!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

// AMIRDHAVARSHINI AMMA said...
இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது !

தள்ளியே நிற்கட்டும்

சேர்ந்த காதலெல்லாம் அழுகின்ற போது, தள்ளி நின்று சிரிக்கிற காதல் எவ்வளவோ மேல்.//

வாங்க அக்கா. வருகைக்கு நன்றி!!!

ராமலக்ஷ்மி said...

//விட்டுப்போன உன்னை நினைத்து
புலம்புகின்றன என் கவிதைகள்.//

அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு
சொந்த வாழ்க்கையின் சுபிட்சத்துக்கு
சிந்து பாடட்டும் கவிதைகள்:)!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//ராமலக்ஷ்மி said...
//விட்டுப்போன உன்னை நினைத்து
புலம்புகின்றன என் கவிதைகள்.//

அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு
சொந்த வாழ்க்கையின் சுபிட்சத்துக்கு
சிந்து பாடட்டும் கவிதைகள்:)!//

வருகைக்கு நன்றி ராம் அக்கா, என்னோட காதல் வெற்றி பெற்று பரிசா ஒரு இனிய மகளும் உண்டு, இதெல்லாம் சும்மா பதிவுக்காக :)

சந்தனமுல்லை said...

நல்லா இருக்குங்க கவிதை!

ராமலக்ஷ்மி said...

//என்னோட காதல் வெற்றி பெற்று//

சந்தோஷம்

//பரிசா ஒரு இனிய மகளும் உண்டு,//

தெரியுமே, முதன் முதலில் உங்கள் வலைப்பூவுக்கு வந்ததே அவளைப் பார்க்கத்தானே:)!

//இதெல்லாம் சும்மா பதிவுக்காக :)//

அதுவும் தெரியுமே, ஸ்மையியைப் பார்க்கவில்லையா:))?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மீண்டும் நன்றிங்க ராம் அக்கா!!!

MSK / Saravana said...

தலைப்பும் கவிதையும் மிக அழகு..

MSK / Saravana said...

// ஆயில்யன் said...
/உனக்கான கடிதங்களில்
கேள்விக்குறிகளால் நிரப்பி
எனக்கே அஞ்சல்
செய்து கொள்கிறேன்.//

வாட் எ கிரேசி பாய் :)))//

ரிப்பீட்டு...:))))))

அன்புடன் அருணா said...

//இந்த கவிதையும் நானும்
தனித்திருக்கிறோம்,
காதல் தள்ளி நின்று சிரிக்கிறது !//


கலக்குறீங்க....
அன்புடன் அருணா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு..:)