Saturday, November 1, 2008

விட்டுப்போனவளின் விடாத நினைவுகள் - 2.



கசக்கியெறிந்த காகித குவியல்
பூனையின் நடையால்
சலசலக்கிறது;



உன் கவிதைக்கான வார்த்தைகளை
இருட்டின் அடர்த்தியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.



எடுத்து வைத்த உணவின் மீது
எறும்புகளின் ஊர்வலத்தொடக்கம்.



இந்த இரவிலும் எங்கோயோ கரையும்
ஒற்றைக்காகம் எனக்குத்துனையாய்.



உன் இனிய உறக்கம் கலைக்குமா
என் கொடிய நினைவுகள்?



நாவறண்ட பேனா
எழுத மறுக்கிறது!



எப்போதும் போல்
எல்லோருக்கும்
விடிகிறது பொழுது!!!


-------------------------------

22 comments:

Thamiz Priyan said...

:))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வருகைக்கு நன்றி தமிழன்னே!!!

தமிழ் அமுதன் said...

நல்லாருக்கு!

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க கவிதை!! feeling blue??

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

// சந்தனமுல்லை said...
நல்லாருக்குங்க கவிதை!! feeling blue??//

தேங்க்ச்சுங்க....

தமிழன்-கறுப்பி... said...

\
"விட்டுப்போனவளின் விடாத நினைவுகள் - 2."
\

நல்லாருங்க...!

ஆயில்யன் said...

//விட்டுப்போனவளின் விடாத நினைவுகள் - 2."///

ஊருக்கு போறேன்னு சொல்லிக்கிட்டிருக்கற நேரத்துல ஏன் ராசா இப்பிடி??

வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல???!

(எப்பிடி தெரியும் அப்படின்னு எகத்தாளமா கேள்வியெல்லாம் கேக்கப்படாது அண்ணன் பேக்ஸ் அனுப்பிவைப்போம்ல!)

ஆயில்யன் said...

//உன் கவிதைக்கான வார்த்தைகளை
இருட்டின் அடர்த்தியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
//

படிக்கிற காலத்தில ஒழுங்கா படிச்சிருந்தா ஏன் இப்படி கிடைக்கவே கிடைக்காத இடத்தில எல்லாம் போய் தேடப்போறீங்க?????:))))

ஆயில்யன் said...

//இந்த இரவிலும் எங்கோயோ கரையும்
ஒற்றைக்காகம் எனக்குத்துனையாய்.//

எங்கேயோ கரையும் காக்கா சவுண்டு கேக்குது ஆனால் ஊர்லேர்ந்து வர்ற போன் சவுண்டு மட்டும் கேக்கமாட்டிக்கிதா???

இருடி ராசா இரு!

ஆயில்யன் said...

//
உன் இனிய உறக்கம் கலைக்குமா
என் கொடிய நினைவுகள்?//


பாவம் அந்த புள்ளைத்தான் நிம்மதியா தூங்குதுல்லா நீ ஏனய்யா டெரராட்டம் போய் அதை டிஸ்டர்ப் பண்ற?

ஒழுங்கா கொடிய நினைவுகள உங்களோடவே எடுத்துக்கிட்டு ஓடிப்போயிடுங்க!!

ஆயில்யன் said...

//நாவறண்ட பேனா
எழுத மறுக்கிறது!/

அதுக்குத்தான் எச்சில் தொட்டு எழுதாதீங்க, பேனாவுக்கு இங்க் போட்டு எழுதுங்கன்னு சொன்னேன்! கேட்டாத்தானே?????

ஆயில்யன் said...

//எப்போதும் போல்
எல்லோருக்கும்
விடிகிறது பொழுது!!!//

ஆமாம் விடிஞ்சுடுச்சு எல்லாரும் பல்லு தேய்க்க போறாங்க உமக்குத்தான் அது புடிக்காதே போய் படுத்து தூங்குங்க போங்க!

ஆயில்யன் said...

//நல்ல விதமா மனசுக்கு இதமா ஏதாவது சொல்லிட்டு
போங்க...
//

நல்ல விதமா - உண்மை

மனசுக்கு இதமா - மென்மை

ஏதாவது - $%#@#%#%$^%&^&*#@%@%$#%^$#^%&%&*&^$#^#%^*^*^$#$%^*%^*#^

சொல்லியாச்சு!

போங்க - அத நீங்க சொல்லபடாது எங்களுக்கு தெரியும்!

இப்ப போறேன் திரும்ம்ம்ம்ம்ப










வருவோம்ய்யா வருவோம்!

நிஜமா நல்லவன் said...

ஆயில் அண்ணா பின்னூட்டம் எல்லாத்துக்கும் ரிப்பீட்டேய்....:))

ராமலக்ஷ்மி said...

எல்லோருக்குமாய் சேர்த்து அடித்து விளையாடி விட்டார் ஆயில்யன், ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு சிக்ஸர் என:))))))!

Thanks ஆயில்யன்:)!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே அண்ணே....

ஆயில் அண்ணே....

போதும்ண்ணே போதும்.....

முடியல.....

சின்னப்பையன்...

விட்டுடுங்க சாமிய்ய்ய்!!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நிஜமா நல்லவன் அண்ணே

ராம் அக்கா

வருகைக்கு நன்றி!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கவிதை. அதை ஏன் ஆயில்ஸ் அண்ணன் கண்ணுல தெரியிற் மாதிரி போட்டீங்க.

உன் இனிய உறக்கம் கலைக்குமா
என் கொடிய நினைவுகள்?

ப்ளீஸ் தூங்கறவங்களை போய் ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க.

உன் கவிதைக்கான வார்த்தைகளை
இருட்டின் அடர்த்தியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
நல்லா இருக்கு.


நாவறண்ட பேனா
எழுத மறுக்கிறது!
கொஞ்சம் இங்க் ஊத்துங்க.

எப்போதும் போல்
எல்லோருக்கும்
விடிகிறது பொழுது!!!
ஆமாம் சே தூங்கவே முடியலை. சீக்கிரமாவே விடிஞ்சிடிது.

தம்பி எனக்கொரு டவுட்
ஆமா கல்யாணமாகி குழந்தையும் பிறந்தபிறகுமா

விட்டுபோனவளோட நினைவு விடல.

பாவம் நல்ல புள்ள தப்பிச்சிக்கிச்சு.

சந்தனமுல்லை said...

//மனதில் நின்ற காதலியே மனைவியாக
வரும் போது சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!//

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த படமும்!!

ராமய்யா... said...

:))
ஆயில் அண்ணே என்ன ஆயில் பேட் வச்சிருக்காரா?? இப்பிடி பின்னுராரு???

உண்மை என்னன்னா பதிவ விட பின்னூட்டம் தான் புடிச்சிருக்கு...

நல்ல கவிதை சுடர்...

Anonymous said...

கவிதையை ரெம்ப ரசித்தேன்.
பின்னூட்டத்தில் ரெம்பவே சிரித்தேன்.

coolzkarthi said...

எல்லாமே டாப் டக்கர் ...