Wednesday, November 5, 2008

காத்திருக்கும் காதல்




உனக்கான நினைவுகளில்
வாடவிட்டு எனக்கான
பொழுதுகளை எடுத்துச்
சென்றவனே!



பழகிப்பழகி புளித்துப்
போய் விட்டது
இந்த தனிமை!



கனவுக்காடுகளில்
சுற்றியலைவதால்
என் நினைவு வயல்கள்
வறண்டு விட்டனடா!



தலையனையோடு
பகிர்ந்துகொள்கிறேன்
கண்ணிரோடு
நம் நேசத்தையும்!



உன் வரவை
எதிர்னோக்கி
சுற்றிக்கொண்டிருக்கிறது
என் கடிகாரம்!



அதிகாலை இரயில்
ஓசையில் கலைகின்றன
என் கனவுகள்!


.

13 comments:

ராமய்யா... said...

//தலையனையோடு
பகிர்ந்துகொள்கிறேன்
கண்ணிரோடு
நம் நேசத்தையும்!
//


சூப்ப்ர்..

ராமலக்ஷ்மி said...

கொஞ்சமா இல்லே நிஜம்மாவே ரொம்ப அருமை.

பாராட்டுக்கள்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க ராம்...

வருகைக்கு நன்றி!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி ராம் அக்கா!

ரொம்ப டேங்க்ஸ்...

தமிழ் அமுதன் said...

தனிமை!
வறட்சி !
கண்ணீர்!

அருமை!

Thamiz Priyan said...

நல்லா இருக்கு தம்பி!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி திரு.ஜீவன் ...

தொடர்ந்து ஆதரவு தாரும்!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி தமிழ் அண்ணே!!!

ஆயில்யன் said...

//அதிகாலை இரயில்
ஓசையில் கலைகின்றன
என் கனவுகள்!//

தம்பி ஊருக்கு போக டிரெயின் புக் பண்ணிட்டீயாப்பா?

ரைட்டு!

கவிதை நல்லா இருக்கு!

Princess said...

ஒரு பெண்ணின் பிரிவுத்துயர நல்லா பிரதிபலிச்சிருக்கீங்க!

நிஜமா நல்லவன் said...

super!

Unknown said...

Hai friend super sakthi kuwait

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு தம்பி!

ரிப்பீட்டிக்கிறேன்.