Saturday, November 8, 2008

நினைவிருக்கிறதா உனக்கு?



ஓ! என் நண்பனே....
முகவரி மாறி
மறந்து போன உனக்கு
இக்கடிதமெழுதி
காற்றலையில் விடுகிறேன்!

நினைவிருக்கிறதா உனக்கு?


வாடகை சைக்கிள் வாங்கி
குரங்கு பெடல் போட்டது,



தாமரைக்குளத்தில்
மூங்கு நீச்சல் போட்டது,



தென்னைமரமேறி
நெஞ்சு சிராய்ப்போடு
இள நீர் குடித்தது,



பம்பர விளையாட்டில்
அடித்துக்கொண்டது,



உப்புத்தொட்டு
மாங்காய் கடித்தது,



புது பேண்ட் போட்டு
ஊரைச்சுற்றியது,



கோவில் கட்டி
சாமி தூக்கியது,



ஆம் நண்பா உறங்கா
இந்த நினைவுகள்
உயிர்ப்போடு
வைத்திருக்கின்றன
நம் நட்பை.



நானும் நம் கிராமமும்
உன்னைப்போல் மாறிவிடாமல்
காத்திருக்கிறோம்.....



என்றேனும் ஒரு நாள்
உன் நினைவலைகளில்
என் ஞாபகம் வந்தால்
ஒரு முறை வந்து போ


வாழ்க்கையையும்
நட்பையும் புதுப்பிக்கலாம்!!!


.

7 comments:

ராமலக்ஷ்மி said...

//"நினைவிருக்கிறதா உனக்கு?"//

இன்றைய வேகமான உலகத்திலே இந்தக் கேள்வியை நாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது உறங்கும் நினைவுகள் விழித்துக் கொள்ளும் சில வேளைகளில்:(!

கவிதை அருமை.

நாணல் said...

உங்கள் நட்பு உங்களை வந்தடைய என் வாழ்துக்கள்.... :)
இப்படி ஒவ்வொருவரின் மனதிலும் தனது சிறிய பருவத்து நண்பரைப் பற்றி நினைவுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.........

அன்புடன் அருணா said...

//என்றேனும் ஒரு நாள்
உன் நினைவலைகளில்
என் ஞாபகம் வந்தால்
ஒரு முறை வந்து போ

வாழ்க்கையையும்
நட்பையும் புதுப்பிக்கலாம்!!!//

ஐயோ....மனதை அள்ளிக் கொள்கிறது வார்த்தைகள்....
அன்புடன் அருணா

ஆயில்யன் said...

//ஆம் நண்பா உறங்கா
இந்த நினைவுகள்
உயிர்ப்போடு
வைத்திருக்கின்றன
நம் நட்பை.//

ஆம்

நண்பா!

ஆம்!!!

ராமய்யா... said...

Aam Nanaba..
enthanayo ninaivugal innum uyiroudan

Anonymous said...

//நானும் நம் கிராமமும்
உன்னைப்போல் மாறிவிடாமல்
காத்திருக்கிறோம்.....//

உண்மைதான்.

என்றுமே மாறாத நட்பு, சுவைதந்து கொண்டே இருக்கும்...உங்கள் கவிதை வரிகள் போன்று.

வாழ்த்துக்கள்.

venkatx5 said...

/*

உப்புத்தொட்டு
மாங்காய் கடித்தது,

*/

ஸ்.. ஆஆஆ.. சிலிர்க்குதுங்க.. (Nothing But Truth..)