ஒரு ஊர்ல ஒரு பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருடைய
திறமையான , பக்குவமான நடைவடிக்கைகளால் தன்
தொழிலில் மென்மேலும் இலாபங்களை ஈட்டினார்.
அவர் தன் மகனிடம் எல்லா வியபாரங்களையும் ஒப்படைத்துவிட்டு
ஓய்வெடுக்க விரும்மினார்.
தன் மகனை அழைத்து மகனே, இத்தனை வருடம் நம்
வியபாரத்தை நல்ல படியா நடத்தி வந்தேன், இனி வயதாகி
விட்டதால் எல்லா பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்க
விரும்புகிறேன், உனக்கு இஷ்ட்டம் என்றால் எனக்கு தெரிந்த
எல்லா நுனுக்கங்களையும் உனக்கு சொல்லித்தருகிறேன், என்ன
சொல்கிறாய்? என்று கேட்டார். மகனும் சம்மதிக்க, சரி உனக்கான
முதல் பாடம் நாளை காலை ஆரம்பிக்கலாம் என்று கூறி சென்று விட்டார்.
மறு நாள் காலை, மகனை அழைத்து மாடிக்கு செல்லுமாறு
கூறினார். மகனும் மாடிக்கு சென்றான். இவர் கீழே நின்று
கொண்டு மகனை மாடியிலிருந்து கீழே குதிக்க சொன்னார்.
மகனோ திக்கித்து அப்பா கீழே குதித்தால் கால் உடந்துவிடும்
எப்படி குதிப்பது என்றான். அப்பாவோ அட சும்மா குதி,
நாந்தான் கீழ இருக்கேன்ல்ல குதி, என்றார். மகனும் அப்பாவை நம்பி
குதித்துவிட்டான். ஆனால் அப்பா ஒன்னும் செய்யவேயில்லை. அவனுக்கு
காலில் பலத்த அடி. என்ன அப்பா இப்படி செய்து விட்டீர்கள், உங்களை
நம்பிதானே குதித்தேன் என்றான்.
அப்பா கூறினார்
மகனே இதுதான் உனக்கான முதல் பாடம். தொழில் என்று
வந்துவிட்டால் யார் என்ன கூறினாலும் நம்பக்கூடாது.
தனக்குத்தானே சிந்தித்துப்பார்த்து இதை செய்தால் என்ன
பலன் ஏற்படும் என்று யோசித்து செயல் பட வேண்டும்.
இது உன் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான் இப்படி செய்தேன் என்று கூறினார்.
ஹி ஹி 1 : மகன் பின்னாளில் எப்படி வியபாரம் செய்தான் என்பது
படிப்பவரின் கற்பனைக்கு.
ஹி ஹி 2 : எல்லாரும் மொக்கை போடும் போது
நம்ம ஏதாவது நல்ல பதிவு போடனும்ன்னு
இந்த கதை.
ஹி ஹி 3 : இது நல்ல கதையான்னு கேட்ட்கக்கூடாது
.
12 comments:
//இது நல்ல கதையான்னு கேட்ட்கக்கூடாது.//
கேட்கத்தானே கூடாது, நல்ல கதைன்னு சொல்லலாமில்லையா? நல்ல கதை. வாழ்த்துக்கள்.
;-))..நல்லாவே யோசிக்கறீங்க!
//இது நல்ல கதையான்னு கேட்ட்கக்கூடாது.//
பதிவு என்று
வந்துவிட்டால் யார் என்ன கூறினாலும் நம்பக்கூடாது.
தனக்குத்தானே சிந்தித்துப்பார்த்து இதை செய்தால் என்ன என்று யோசித்து செயல் பட வேண்டும்.
இது உன் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்
நன்றி
ராம் அக்கா
முல்லை அக்கா
:)
அண்ணே, ஆயில் அண்ணே
சரியா சொன்னிங்க...
தந்தை சொல் மிக்க மந்திரம்
இல்லை! அப்படின்னு சொல்லுவாங்களே?
அது இது தானா?
அண்ணே சுடர்,
எதோ நீங்களாவது கவிதை அது இதுன்னு இருந்தீங்க.. ஏன்?? ஒரு கதை எழுதிட்டு அத மொக்கைன்னு சொல்ரது தான் பெரிய மொக்கை அதனால நீங்க ஒரு மொக்க பதிவ பொட்டாச்சு...
மெய்யாலுமே, சோக்கானா கருத்து தான் பா....
//இது நல்ல கதையான்னு கேட்ட்கக்கூடாது.//
பதிவு என்று
வந்துவிட்டால் யார் என்ன கூறினாலும் நம்பக்கூடாது.
தனக்குத்தானே சிந்தித்துப்பார்த்து இதை செய்தால் என்ன என்று யோசித்து செயல் பட வேண்டும்.
இது உன் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்
ரிப்பீட்டிக்கிறேன்.
கதை ரொம்ப நல்லா இருக்குங்க...
ஹி ஹி; அதென்னமோ தெரியலீங்க வெள்ளிகிழமை ஆறு மணி ஆனா பொய் பொய்யா சொல்ல வருது :-)
:)
நச்சுன்னு இருக்கு..
Post a Comment