உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அந்த முண்டாசு கட்டிய முறுக்கு மீசையை...
அவன் மீசை மட்டும் அடர்த்தியில்லை; கவிதையும் தான்அவன் வார்த்தைகளை கொண்டு அல்ல
தீப்பொறி கொண்டுகவிதை எழுதியவன்..
அவன் எழுத்தின் கூர்மைக்கு முன்
அன்னியரின் துப்பாக்கிகள் தோற்றுப்போயின..
அவன் வாள் கொண்டு
அல்லவார்த்தைகள் கொண்டு போராடியவன்..
சிட்டு குருவியையும் சினேகித்தவன்..
அவனுடைய பாட்டு நெருப்பு பற்ற
வைத்தவிடுதலை தீ பற்றி எரிந்தது நாடெங்கும்..
எல்லோரையும் போல மறந்துவிட்டோம் அவனையும்..
ஓரு வேளைஅவனுடைய பிறந்த நாளுக்கோ
நினைவு நாளுக்கோ
அரசு விடுமுறை அளித்தால்
பலருக்கு அவனை நினைவு வரலாம்...
9 comments:
nice poem,i am expect more experience story from you...
by
VSSA
///ஓரு வேளைஅவனுடைய பிறந்த நாளுக்கோ
நினைவு நாளுக்கோ
அரசு விடுமுறை அளித்தால்
பலருக்கு அவனை நினைவு வரலாம்...//
நச் என்ற வரிகள்..
நன்றாக உள்ளது
//ஓரு வேளைஅவனுடைய பிறந்த நாளுக்கோ
நினைவு நாளுக்கோ
அரசு விடுமுறை அளித்தால்
பலருக்கு அவனை நினைவு வரலாம்./
உங்களின் நம்பிக்கை என்னை ஆச்சர்யப்படுத்திகிறது!
அனேகமாக அந்த நாளிலும் நாலு டிவிக்களில் பேட்டிக்களினையும் சினிமாவும் பார்த்து களித்திதிருக்கும் மக்கள் :(
//Blogger ஆயில்யன் said...
//ஓரு வேளைஅவனுடைய பிறந்த நாளுக்கோ
நினைவு நாளுக்கோ
அரசு விடுமுறை அளித்தால்
பலருக்கு அவனை நினைவு வரலாம்./
உங்களின் நம்பிக்கை என்னை ஆச்சர்யப்படுத்திகிறது!
அனேகமாக அந்த நாளிலும் நாலு டிவிக்களில் பேட்டிக்களினையும் சினிமாவும் பார்த்து களித்திதிருக்கும் மக்கள் :(//
ரிப்பீட்டேய்...!
realy super friend keep it up
Anbudam
saravanan k
அவர் ஆங்கிலேயர்க்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் கவிதை நடையில் இருந்ததா....?? இருந்திருந்தால், அதுவும் அருமையான கவிதையாக இருந்திருக்கும்..
ஃஃஃஃ
அவர் கோழை என்று சொல்லவில்லை...கோழையாக இல்லாமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தான் சொல்கிறேன்...
//அவன் எழுத்தின் கூர்மைக்கு முன்
அன்னியரின் துப்பாக்கிகள் தோற்றுப்போயின.//
//அவன் வார்த்தைகளை கொண்டு அல்ல
தீப்பொறி கொண்டுகவிதை எழுதியவன்..//
உண்மையை உரைத்திருக்கும் விதம் அருமை சுடர்.
//ஓரு வேளைஅவனுடைய பிறந்த நாளுக்கோ
நினைவு நாளுக்கோ
அரசு விடுமுறை அளித்தால்
பலருக்கு அவனை நினைவு வரலாம்...//
ம்ம்..அப்போதும் கூட எதற்கு லீவு என்பதை மறந்து மக்கள் சின்னத் திரையில் கட்டுண்டு கிடப்பார்கள். போனால் போகிறது என ஏதாவது ஒரு சேனல் பாரதி படத்தைக் காட்டினாலும் 'சின்னத்திரையில் முதன் முறையாக' என முழங்கி விளம்பரமாகிய டப்பா படத்தை ஆர்வமாய் பார்ப்பார்கள்.
ஆனாலும் பாரதியின் பாடல்களுக்கும் கருத்துக்களுக்கும் என்றும் அழிவில்லை.
ஆனாலும் பாரதியின் பாடல்களுக்கும் கருத்துக்களுக்கும் என்றும் அழிவில்லை.
Right said!
இங்கு சுதந்திர தினமும் அர்ஜுன் இன் வீர சாகச படத்துடன் TV யுடன் முடிந்து விடுகிறதே !
பாரதியின் நினைவாக விடுமுறை கொடுத்தால் அந்நாளும் விஜயகாந்த் உட்பட்ட சுதந்திர (!) போராளிகளின் காதலையும் வீரத்தையும் ரசிப்பதுடன் வீணாளாகி விடும்.
Post a Comment