Monday, October 20, 2008

குழந்தையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம் தானே!


எனது கணிப்பொறியின் முகப்பை எப்போதும்
குழந்தைகளின் புகைப்படங்களே அலங்கரிக்கின்றன.


குழந்தையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம் தானே!
மிகுந்த பணி சுமைகளுக்கிடையில் மண்டை காயும் போது
எல்லா கோப்புகளையும் ஒரு நிமிடம் மினிமைஸ் பண்ணி
அந்த இளம் சிரிப்பை பார்த்தால் போதும் எல்லாவித
இறுக்கங்களும் சூரியனை கண்ட பனி போல விலகும்!


கலைவானர் என்.எஸ்.கே பாடியது போல பலவித
சிரிப்புகளுக்கிடையில் கவலைகளைப் போக்கும்
அரும்மருந்தாக இக்கள்ளமில்லா இளம் சிரிப்பை
காண்பது மனதிற்கு இனிமை சேர்க்கும் என்பது
என்னுடைய அசைக்கமுடியா நம்பிக்கை.


வசிய சிரிப்பு, ஆணவ சிரிப்பு, அகங்கார சிரிப்பு,
விஷம சிரிப்பு, வில்லங்க சிரிப்பு, விகார சிரிப்பு,
வில்ல சிரிப்பு, பொய் சிரிப்பு, போக்கிரி சிரிப்பு,
இது போன்ற பல கொடிய சிரிப்புகளுக்கிடையே
குழந்தைகளின் பொன் சிரிப்பு போற்றத்தக்க
ஒன்று என் கருத்தை மறுக்கத்தான் முடியுமா?


அப்புறம் நம்ம முகப்பு பேச்சிலர் அறை போல்லெல்லாம்
இருக்காது. நன்கு துடைத்து வைத்த குடும்ப பெண்ணின்
வீடுபோல சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவேன்.


இப்பதிவிட அழைத்த அருமை அண்ணன் உயர்திரு.தமிழ்
அவர்களுக்கு,
அருமை அண்ணன் மயிலை சிங்கம் ஆயிலுக்கும்
நன்றி.


ஹிஹி: எப்படியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க!
டெஸ்க்டாப்ப வைச்சி ஒரு பதிவு;
அதுக்கு தொடர் விளையாட்டு வேற!
நல்லாதாம்பா இருக்கு!!! :)

14 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா :))

ஆயில்யன் said...

//எல்லாவித
இறுக்கங்களும் சூரியனை கண்ட பனி போல விலகும்///


என்ன இறுக்கம் அதை பத்தி கூட ஒரு பதிவு போட்டு சொல்லலாம்ல :)))))))))) (இல்ல இது ச்சும்மா!)

ஆயில்யன் said...

//வசிய சிரிப்பு, ஆணவ சிரிப்பு, அகங்கார சிரிப்பு,
விஷம சிரிப்பு, வில்லங்க சிரிப்பு, விகார சிரிப்பு,
வில்ல சிரிப்பு, பொய் சிரிப்பு, போக்கிரி சிரிப்பு,///


இம்புட்டு சிரிப்பும் நீங்க சிரிச்சத்துண்டா இல்ல சிரிச்சவங்கள பார்த்த அனுபவமா?
:)

Thamiz Priyan said...

ஆகா, ஒரு டெஸ்க் டாப்பை பிரிண்ட் எடுத்து பதிவு போடச் சொன்னா தத்துவத்தை கக்கி வச்சி இருக்கியேப்பா... குட்!

Thamiz Priyan said...

///அப்புறம் நம்ம முகப்பு பேச்சிலர் அறை போல்லெல்லாம்
இருக்காது. நன்கு துடைத்து வைத்த குடும்ப பெண்ணின்
வீடுபோல சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவேன்.////
ஓகே சுடர் அங்கிள்! வாழ்க! வளமுடன்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி ஆயில் அண்ணே,

//இம்புட்டு சிரிப்பும் நீங்க சிரிச்சத்துண்டா இல்ல சிரிச்சவங்கள பார்த்த அனுபவமா?//

இந்த சிரிப்பெல்லாம் சிரிக்க முடிந்தாலும் குழந்தையின் சிரிப்பு நம்மாள முடியாதே!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//தமிழ் பிரியன் said...
///அப்புறம் நம்ம முகப்பு பேச்சிலர் அறை போல்லெல்லாம்
இருக்காது. நன்கு துடைத்து வைத்த குடும்ப பெண்ணின்
வீடுபோல சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவேன்.////
ஓகே சுடர் அங்கிள்! வாழ்க! வளமுடன்//

அங்கிளா? :(

சரி சரி, இனிமே ஒழுங்கா நீங்களும் சுத்தமா வைச்சிக்கிங்க!

ராமலக்ஷ்மி said...

படத்தில் குழந்தையின் சிரிப்பு கொள்ளை அழகு.

//குழந்தைகளின் பொன் சிரிப்பு போற்றத்தக்க
ஒன்று என் கருத்தை மறுக்கத்தான் முடியுமா?//

முடியவே முடியாது.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வணக்கம் ராம் அக்கா!(பேர சுருக்கிட்டோமே)

வருகைக்கு நன்றி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாதாம்பா இருக்கு!!! :)

YOUR DESKTOP PICTURE

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

// AMIRDHAVARSHINI AMMA said...
நல்லாதாம்பா இருக்கு!!! :)

YOUR DESKTOP PICTUR//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாப்பா அழகா இருக்கிறது. அழகா சிரிக்கிறது. டெஸ்க்டாப்பும் க்ளீனா இருக்கு..

MSK / Saravana said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

பாப்பா அழகா இருக்கிறது. அழகா சிரிக்கிறது. டெஸ்க்டாப்பும் க்ளீனா இருக்கு..//

Rippeettu..

நாணல் said...

//குழந்தையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம் தானே!
மிகுந்த பணி சுமைகளுக்கிடையில் மண்டை காயும் போது
எல்லா கோப்புகளையும் ஒரு நிமிடம் மினிமைஸ் பண்ணி
அந்த இளம் சிரிப்பை பார்த்தால் போதும் எல்லாவித
இறுக்கங்களும் சூரியனை கண்ட பனி போல விலகும்!//

சரி தாங்க நீங்க சொல்றது... பேசாம குழந்தையாவே இருந்திருக்கலாம்னு கூட தோணும் சில நேரம்... ;)

//அப்புறம் நம்ம முகப்பு பேச்சிலர் அறை போல்லெல்லாம்
இருக்காது. நன்கு துடைத்து வைத்த குடும்ப பெண்ணின்
வீடுபோல சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவேன்.//

ஓ அப்படியா?