நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்!!! ~~~~~~~~~~~~~~~~ யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா பெண்ணே! ~~~~~~~~~~~~~~~~ அன்பே நானிருந்தேன் வெள்ளைக்காகிதமாய் என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியாமாய்! ~~~~~~~~~~~~~~~~ மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்! ~~~~~~~~~~~~~~~~ ஆல விருட்ச்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு, வெட்டியெறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு! ~~~~~~~~~~~~~~~ தூக்கத்தின் இடையில் தலையனை அடியில் கொலுசொலி வருதே அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி.
12 comments:
வாங்க அண்ணே! நாங்களும் பாலைவனத்துல இருக்கவங்க தான்... வாங்க கலக்கலாம்!... :)
//வணக்கம். பிளாக் உலகிற்கு ஒரு புதிய உறவு. என்னையும் ஆதரிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்முதல் அடியை வைக்கிறேன்,...//
முதலடிக்கு வாழ்த்துக்கள்.. அடுத்த அடியை அதிரடியாய் தொடர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)
அடுத்த தபா தலைப்பு இல்லாம போட்டு கலாய்க்க கூடாது. :)
ஓப்பன் செய்ய கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டேன்...
மிக்க நன்றி திரு.தமிழ் பிரியன் அவர்களே... தாங்கள் எந்த பாலைவத்தில் பணி புரிகிரீர்கள்?
மிக்க நன்றி திரு.சென்ஷி அவர்களே. வாழ்த்துக்களுக்கு நன்றி.
மொக்கை பதிவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற ஒடோடி வா...ஒடோடி வா...
வாழ்த்துக்கள்..
ப்லாக் உலகத்திற்க்கு வருக...
அன்புடன் வரவேற்கிறோம்..
வாங்க ஜமாய்ச்சுடலாம்..
வாழ்த்துக்கள்..
ப்லாக் உலகத்திற்க்கு வருக...
அன்புடன் வரவேற்கிறோம்..
வாங்க ஜமாய்ச்சுடலாம்..
(Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.))
என்ன இது சிறு புள்ள தனமா...
தூக்குங்க..
வாங்க வாங்க...::))
அப்ப நீங்க அமீரகமா...:)
வாழ்த்துக்கள்...
அன்புடன் வரவேற்கிறோம்
வாங்க வாங்க...::))
வாழ்த்துக்கள்...
அன்புடன் வரவேற்கிறோம்
Post a Comment