Monday, September 8, 2008

உண்மைதானே


"தந்தை போயின் கல்வி போம்' என்பது அந்தக் கால மொழி. ஆனால் இப்போது குழந்தைகளின் கல்வியில் தந்தையின் பங்களிப்பை விட தாயின் பங்களிப்புதான் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.


வேலைக்குச் செல்லும் பெற்றோர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த உண்மை புலனாகியுள்ளது. "அசோசேமின்' சமூக மேம்பாட்டு அறக்கட்டளை பிரிவு லக்னெü, சண்டீகர், புணே, பெங்களூர், ஆமதாபாத், உதய்பூர், சிம்லா, டேராடூன், இந்தூர், பாட்னா, கொச்சி, சென்னை ஆகிய நகரங்களில் 4,700 பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தியது.


இதில் குழந்தைகளின் கல்வியில் தந்தையைவிட தாயே அதிக அக்கறை செலுத்துவது தெரிய வந்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் 4 சதவீத தந்தைகள்தான் தங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடத்தைக் கவனிக்க சிறிது நேரம் ஒதுக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எஞ்சிய 96 சதவீத தந்தையர்கள், தங்களது அலுவலக வேலையைக் குறை கூறியதோடு, இதனால் குழந்தையைக் கவனிக்க முடியவில்லை என்று நொண்டிச் சமாதானம் கூறியுள்ளனர்.

10 comments:

Anonymous said...

தங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.

வலை முகவரி
http://nellaitamil.com

ஆயில்யன் said...

நீங்க சொல்ல வந்த அனைத்து செய்திகளினையும் இந்த ஒரு படம் சொல்லிவிட்டது!

Thamiz Priyan said...

நல்ல புகைப்படத்துடன் நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள்... :)

Thamiz Priyan said...

///எஞ்சிய 96 சதவீத தந்தையர்கள், தங்களது அலுவலக வேலையைக் குறை கூறியதோடு, இதனால் குழந்தையைக் கவனிக்க முடியவில்லை என்று நொண்டிச் சமாதானம் கூறியுள்ளனர்.///
மிகவும் வருந்ததக்க விஷயம்.. :(

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மிக்க நன்றி. நெல்லைதமிழ் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. நன்றி.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

திரு. ஆயில் அவர்களே, எல்லாம் உங்களின் வாழ்த்துக்கள் தான்...
வருகைக்கும், கமெண்ட்டுக்கும் நன்றி...

Anonymous said...

very nice photo mr.sudar
by
vssa

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மாப்ள, நீ உன்னோட g mail id ய use பண்ணி கமெண்ட் போடலாமே!
thanks to vssa.

Blogger said...

உண்மையான தகவல்...
இந்த நிலை மாறும் என நம்புவோம்..இல்லையில்லை மாற்றிக்காட்டுவோம்..

Vishnu... said...

நாம்
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்... நண்பரே ...

நல்ல ஒரு ஆக்கம்.... வாழ்த்துக்களுடன் ....